பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69


தனது குடிமக்களிடம் அன்பு செலுத்துவதிலே தாய் போலிருந்தான். அதாவது தாய் எப்படித் தன் சேயை அன்புடன் பேணிப் பாதுகாப்பாளோ அம்மாதிரி பேணிப் பாதுகாத்து வந்தான். யாரை? குடிமக்களே.

குடிமக்களுக்கு நன்மை செய்வதிலே தவம் போலிருந்தான். அதாவது தவமானது எப்படி அளவற்ற நலன்களைத் தருமோ அப்படி அளவற்ற நன்மைகள் செய்தான்.

தன் குடிமக்களை எல்லாம் நல்ல வழியிலே நடத்திச் செல்வதில் சத்புத்திரர் போலிருந்தான். சத்புத்திரர்கள் என்ன செய்வார்கள்? நல்ல காரியங்களைச் செய்து தங்கள் பெற்றோர் நற்கதி அடையச் செய்வார்கள். அம்மாதிரி நல்ல காரியங்கள் செய்து தன் குடிமக்களை நல்வழியில் செலுத்தினான் தசரதன்.

வழியலா வழிச்செல்வோர் நோய் வாய்ப்படுவர். நோய் என் செய்யும்? அவரை வருத்தும்; வாட்டும். அதே போல தீய வழிச்செல்லும் குடிமக்களைத் தசரதன் வருத்தினான்; வாட்டினான். எனவே நோய் போன்றவன் ஆக இருந்தான்.

இருப்பினும், நோயினால் வருந்துவோரின் வாட்டத்தைத் தீர்ப்பது மருந்து அன்றோ? அதே போலத் தீய வழியில் சென்ற குடிமக்களைத் தண்டித்துப் பின் அவர்க்கு அதனால் ஏற்படும் வாட்டத்தையும் போக்கினான். எனவே நோய் தீர்க்கும் மருந்து போன்றவனாக விளங்கினான்.

𝑥𝑥𝑥𝑥

அன்னான்–அந்த தசரத மன்னன்; எவர்க்கும்—தனது குடிமக்கள் யாவருக்கும்; அன்பின்—மிகுந்த அன்பு பாராட்டுவதாலே; தாய் ஒக்கும்—பெற்ற தாய் போல இருந்தான்; நலம் பயப்பின்—வேண்டிய நன்மைகள் எல்லாம்