பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தேரில் ஏற்றிக் கொண்டான்; அரண்மனை அடைந்தான்; மன்னர் மன்னருக்குத் தக்க மரியாதை பல செய்தான்; அவர் வந்த கருத்து யாதெனக் கேட்டான். தசரதனும் தனது நோக்கம் இன்னதென்று கூறினான்.

கலைக்கோட்டு முனிவரைத் தானே அயோத்தி நகருக்கு அழைத்து வருவதாக உறுதி கூறினான் உரோம பாதன். அந்த உறுதிமொழி கேட்டு உளம் மகிழ்ந்தான் தசரதன்; அயோத்திக்குத் திரும்பினான்.

தசரதனின் பெருமையையும், அயோத்திக்கு விஜயம் செய்ய வேண்டுவதன் அவசியத்தையும் முனிவருக்கு எடுத்துக் கூறினான் உரோமபாதன்; கேட்டார் முனிவர். உரோம பாதனின் வேண்டுதலுக்கு இணங்கினார்.

முனிவருடன் அயோத்திக்குப் புறப்பட்டான். உரோம பாதன். அவர் தம் வருகையைத் தூதுவர் மூலம் தசரத சக்கரவர்த்திக்கு அறிவித்தான்.

முனிவர் தம் வருகை அறிந்த தசரத சக்கரவர்த்தி மிக மகிழ்ந்தான். முனிவரை எதிர் சென்று அழைத்தான்.

மன்னன் தனது ஆசியை நாடிய காரணம் யாது என்று வினவி அறிந்தார் முனிவர். புத்திர காமேஷ்டி யாகம் செய்ய இசைந்தார்.

யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை விரைவிலே செய்யுமாறு பணித்தார்.

தசரதன் மகிழ்தான்; யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யுமாறு உத்திரவு பிறப்பித்தான். யாகமும் நடைபெற்றது.