பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

உபசாரங்கள் செய்தான்; அளவளாவினான். அவர் வந்த நோக்கம் யாது என்று கேட்டான். அப்போது முனிவர் சொன்னார்.

பகைவன் என்று சொல்லக் கூடியவன் எவனுமே இல்லாமல் ஒழித்த தசரத மன்னா! புலால் நாற்றம் வீசும் வேலை ஏந்தியவனே!

என் போன்ற முனிவர்களும், தேவர்களும் தங்களுக்குத் துன்பம் ஒன்று வந்தால் எங்கு செல்வார்கள்?

கைலாயம் போய் சிவபெருமானிடம் முறையிடுவார்கள்; பாற்கடலுக்குப் போய் திருமாலிடம் முறையிடுவார்கள்; பிரம்ம லோகம் சென்று பிரம்ம தேவனிடம் முறையிடுவார்கள்.

அமராவதி சென்று தேவேந்திரனிடம் முறையிடுவார்கள். அயோத்திக்கு வந்து உன்னிடம் தஞ்சம் புகுவார்கள் புகல் இடம் வேறு ஏது?

𝑥𝑥𝑥𝑥

இகல் கடந்த—பகைவரை முற்றிலும் வென்ற; புலவு வேலோய்—புலால் நாற்றம் கொண்ட வேலை ஏந்தியவனே! என் அனைய முனிவர்களும்—என்னையொத்த முனிவர்களும்; இமையவரும்—தேவர்களும்; இடையூறு ஒன்று உடையர் ஆனால்–யாதாயினும் துன்பம் ஒன்று ஏற்பட்டவரானால்; (அதைப் போக்க) பல் நகமும் நகு-பல்வேறு மலைகளும் தாழ்வுறும் படியான; வெள்ளிப் பணி வரையும்–பனி மூடிய வெள்ளி மயமான கயிலாய மலையும்; பால் கடலும்—திருப்பாற்கடலும்; பதும பீடத்தன் நகரும்—தாமரை மலரின் மீது இருக்கை கொண்டுள்ள பிரம தேவன் நகரும்; கற்பக நாடு அணி நகரும்—அழகிய தலைநகராகிய அமராவதியும்; மணிமாடம் அயோத்தி மணிகள் பதித்த