பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

இரு கைகளையும் கூப்பிக் கொண்டு; அரசு எய்தி இருந்த பயன்—நான் அரசு பெற்ற பயனை; எய்தினன்–அடைந்துவிட்டேன்; இனி செய்வது அருளுக—இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று பணித்து அருள்க; என்று முன் மொழிய–என்று முன்னே சொல்ல; ஆங்கு–அப்பொழுது; முனிவன்—விசுவாமித்திர முனிவன்; பின்மொழியும்— பின்வருமாறு சொன்னான்.

𝑥𝑥𝑥𝑥


ரு வனத்துள் யான் இயற்றும்
         தகை வேள்விக்கு
         இடை யூறாத் தவம் செய்வோர்கள்
வெரு வரச் சென்று அடை
         காம வெகுளி என
         நிருதரிடை விலக்கா வண்ணம்
செரு முகத்துக் காத்தி என
         நின் சிறுவர்
         நால் வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என
         உயிர் இரக்கும்
         கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்

சித்த வனத்திலே வேள்வி யொன்று செய்ய எண்ணி இருக்கிறேன். அந்த வேள்விக்கு அரக்கரால் எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் காப்பாயாக. அவ்விதம் காத்தற்கு நின் புதல்வர் நால்வருள் மூத்த குமாரனாகிய இராமனை என் உடன் அனுப்புவாயாக என்று தசரதன் மனம் துடிக்கும் வண்ணம் கூறினான், விசுவாமித்திர முனிவன்.

𝑥𝑥𝑥𝑥