பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

புண்ணில்—காயத்தில்; கனல் நுழைந்தால் என—கொள்ளிக் கட்டை நுழைந்தது போல; செவியில் புகுதலோடும்—காதிலே வீழ்ந்தவுடனே; காலன் வேலான்-பகைவர்க்கு எமன் போன்ற கொடிய வேல் கொண்ட தசரத மன்னன்; உள் நிலாவிய—உள்ளே குமுறி எழுந்த; துயரம்-துயரமானது; பிடித்து உந்த-பிடித்துத் தள்ள; ஆர் உயிர்-அரிய உயிரானது; ஊசலாட–ஊஞ்சல் ஆடுவது போல உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்க; கண் இலான்—பிறவிக் குருடன் ஒருவன்; பெற்று–பார்வை பெற்று; இழந்தான் என–மீண்டும் அதை இழந்துவிட்டான் என்று சொல்லும்படியாக, கடுந்துயரம்—மிகக் கொடிய துன்பத்தால் உழந்தான்–வருந்தினான்.

𝑥𝑥𝑥𝑥

“முனிவரே! வருவீர்! நான் உம்முடன் கானகம் வருகிறேன். அரக்கரால் எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் பாதுகாப்பேன். இராமன் சிறுவன்; பன்னிரண்டு வயது பாலன். அவன் வேண்டாம். நான் வருகிறேன்” என்றான் மன்னன்.

அவ்வளவு தான். சினம் பொங்கி எழுந்தது முனிவருக்கு. இருக்கை விட்டு எழுந்தார். அது கண்டார் வசிஷ்டர்.

“மன்னர் மன்னா! சிறிதும் யோசியாதே. இராமனுக்குத் தீது என்றும் வராது. நலமே விளையும். முனிவருடன் அனுப்புக” என்றார்.

வசிட்டர் சொல் கேட்டான் மன்னன். இராமன் இலட்சுமணன் இருவரையும் அழைத்து வருமாறு கூறினான்.

இருவரையும் முனிவர் வசம் ஒப்புவித்தான். முனிவர் மகிழ்ந்தார். அரசகுமாரர் இருவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.