பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


தனக்கு இருப்பிடமான தாமரை மலரைவிட்டு வந்தவளும்; மின்வயின் மருங்குல் கொண்டாள்- மின்னலிடமிருந்து தனது இடையைப் பெற்றவளும்; வேய்வயின் மென்தோள் கொண்டாள். மூங்கிலிடமிருந்து தன் மென்மையான தோள்களைப் பெற்றவளும்; பொன் வயின் மேனி கொண்டாள்- பொன்னிடமிருந்து தன் மேனியைக் கொண்டவளுமாகிய ஒருத்தி; பொருட்டினால்- காரணத்தால்; புகுந்தது என்றாள்- நிகழ்ந்தது என்றாள்.


“இன்னவள் தன்னை உன் பால்
        உய்ப்பல் என்று எடுக்கல் உற்ற
என்னை அவ் இராமன் தம்பி
        இடை புகுந்து இலங்குவாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான்:
        முடிந்தது என் வாழ்வு; முன் நின்
சொன்னபின் உயிரை நீப்பான்
        துணிந்தனென்” என்னச் சொன்னாள்.

“இப்படிப்பட்ட சீதை என்பாளைத் தூக்கி வந்து உன்பால் சேர்க்க எண்ணி அவள் பால் நண்ணிய என்னை, இராமனின் தம்பியாகிய லட்சுமணன் என்பான் வந்து இடையே புகுந்து நான் அவளைத் தூக்கு முன் என் மூக்கை அரிந்து விட்டான். என் வாழ்வு நாசமாயிற்று. இதனை உன் பால் தெரிவித்துவிட்டு உயிர் துறப்பது என்று முடிவு செய்தேன்” என்றாள்.

இன்னவள் தன்னை– இப்படிப்பட்ட அழகியாகிய சீதை என்பாளை; உன்பால் உய்ப்பல் என்று உன்னிடம் சேர்க்கக் கருதி; எடுக்கல் உற்ற என்னை- தூக்கிக்கொண்டு