பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

வர அவள் அருகில் சென்ற என்னை: அ இராமன் தம்பி– அந்த இராமனுடைய தம்பியாகிய லட்சுமணன்; இடை புகுந்து– நடுவே ஓடி வந்து புகுந்து; இலங்குவாளால்– தன்னிடம் விளங்கிய ஒரு வாளினால்; முன்னை– அவளை நான் எடுக்கப் புகு முன்பே; மூக்கு அரிந்துவிட்டான்– என் மூக்கை அறுத்து விட்டான்; என் வாழ்வும் முடிந்தது– அதனால் என் வாழ்வும் முடிந்தே போய்விட்டது; உன்னில் சொன்ன பின்– இவற்றையெல்லாம் உன் பால் கூறிய பின்; உயிரை நீப்பான் துணிந்தனென்– உயிர் துறப்பது என்று முடிவு செய்தேன்; என்ன– என்று சொன்னாள்.

மஞ்சு ஒக்கும் அளக ஓதி
        மழை ஒக்கும் வடித்த கூந்தல்
பஞ்சு ஒக்கும் அடிகள்; செய்ய
        பவளத்தை விரல்கள் ஒக்கும்
அம் சொற்கள் அமுதில் அள்ளிக்
        கொண்டவள் வதனம் ஐய,
கஞ்சத்தின் அளவிற்றேனும்
        கடலினும் பெரிய கண்கள்
.

சீதையின் முகத்திலே வந்து தொங்குகின்ற சுருண்ட கூந்தல் மேகம் போல் இருக்கும். வாரி முடித்த கூந்தல் நீர் உண்ட கருமேகம்போல் இருக்கும். அவள் பாதங்களோ செம்பஞ்சு போல் இருக்கும். விரல்களோ சிவந்த பவளம் போல் இருக்கும். முகமோ தாமரை மலர் போன்றது. கடல் போன்ற அகல கண்கள். அவள் வாயினின்றும் உதிர்க்கின்ற சொற்கள் அமுதம்

ஐய– ஐயனே! அம்சொற்கள்– அழகிய சொற்களை; அமுதில்– அமுதத்திலிருத்து; அள்ளிக்கொண்டவள்– வாரி