பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27



நுதல்– அவளுடைய புருவம்; வில் ஒக்கும்– வில் போலிருக்கும்; என்றாலும்– என்று சொன்னாலும்; விழி– கண்; வேல் ஒக்கும்– வேல் போலிருக்கும்; என்றாலும்– என்று சொன்னாலும்; பல்– அவளுடைய பற்கள்; முத்து ஒக்கும் என்றாலும்– முத்துப் போன்றவை என்று சொன்னாலும்; பவளத்தை இதழ் என்றாலும்– பவளத்தை அவளது உதடுகளுக்குச் சமமாகச் சொன்னாலும்; சொல் ஒக்கும்– சொல் அளவில் ஒத்திருக்கும்; பொருள் ஒவ்வா– பொருள் அமைதி தகுதி பெறா; ஆல்– ஆதலால்; சொல்லலாம் உவமை உண்டோ?– சொல்லத்தக்க உவமானப் பொருள் இந்த உலகில் உண்டோ? இல்லை. நெல் புல் ஒக்கும் என்றாலும்– நெல் புல்லை ஒத்திருக்கும் என்று சொன்னாலும்; நேர் உரைத்தாக அற்றோ? - சொல் அளவில் தகுதி பெறுமே அன்றிப் பொருளில் தகுதி பெறுமோ; பெறாது அன்றோ?

தோளையே சொல்லுகேனோ?
        சுடர் முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ?
        அல்லவை வழுத்துகேனோ?
மீளவும் திகைப்பதல்லால்
        தனித்தனி விளம்பல் ஆற்றேன்?
நாளையே காண்டி அன்றே
        நான் உனக்கு உரைப்பது என்னோ
.

அவளுடைய தோளின் அழகைச் சொல்லுவேனா? ஒளி வீசும் முகத்திலே உலவும் வாள் போன்று கூரிய விழிகளைச் சொல்லுவேனா? ஏனைய உறுப்புகளைச் சொல்வேனா? எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது? தனித்தனியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன். நாளைக்குத்-