பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சீதையின் உரு தென்பட்டதோ அதே போல சூர்ப்பணகையின் கண்முன் எப்போதும் இராமனுடைய உருவே நின்று கொண்டிருந்தது.

அவள் சொன்னாள்,

“செந்தாமரை போன்ற கண்களுடனும், கோவைப்பழம் போல் சிவந்த வாயுடனும், அழகான தோள்களோடும், முழங்கால் வரை தொங்கும் கைகளுடனும், அகன்ற மார்புடனும், மலை போல் நிற்கிறானே இவன்தான் வில் தரித்த அந்த இராமன்” என்றாள்.

“செந்தாமரைக் கண்ணோடும்– செந்தாமரை போன்ற கண்களொடும்; செங்கனி வாயினோடும்– சிவந்த கோவைப்பழம் போன்ற வாயுடனும்; சந்து ஆர் தடம் தோளொடும்– அழகு நிறைந்த பெரிய தோள்களுடனும்; தாழ் தடக்கைகளோடும்– முழங்கால் அளவு தொங்குகின்ற பெரிய கைகளோடும்; அம்தார் அகலத்தொடும்– அழகிய மாலையணிந்த அகன்ற மார்புடனும்; அஞ்சனக் குன்றம் என– மை மலைபோல் வந்தான்– வந்தவனாகிய இவன்தான்; அவ் வல் வில் இராமன் என்றாள்– வலிய வில் உடைய இராமன் என்றாள்.

பொய் நின்ற நெஞ்சில் கொடியாள்
        புகுந்தாளை நோக்கி
நெய் நின்ற கூர் வாளவன்
        நேர் உறநோக்கு, “நங்காய்!
மைந் நின்ற வாள் கண் மயில்
        நின்று என வந்து என் முன்னர்
இந் நின்றவள் ஆம் கொல் இயம்பிய
        சீதை?” என்றான்.