பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


 சூர்ப்பணகை மூட்டி விட்ட காமத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. சீதையையே எண்ணி எண்ணி இரவு முழுவதும் உறங்கவில்லை இராவணன்.

காலையில் அவனைக் காண வந்தாள் சூர்ப்பணகை, “நன்றாகப் பார்! இதோ என் கண் முன் ஒரு பெண் நிற்கிறாளே! மை தீட்டப்பெற்று வாள் போலும் கண்களுடன் ஒரு மயில் வந்து நிற்பது போல் நிற்கிறாளே! இந்தப் பெண் தானா நீ சொன்ன அந்த சீதை நன்றாகப் பார்த்துச் சொல்” என்று கேட்டான் இராவணன்.

நெய் நின்ற கூர் வாளவன்– பகைவரது நிணம் தோய்ந்து நின்ற கூரியவாளாயுதத்தை உடைய இராவணன்; பொய் நின்ற நெஞ்சில் கொடியாள் புகுந்தாளை நோக்கி– அங்கு வந்த பொய் சேர் மனத்தாளாகிய கொடிய சூர்ப்பணகையைப் பார்த்து; நங்காய்! - பெண்ணே! நேர் உற நோக்கு– நன்றாகப் பார்; மை நின்ற– மை தீட்டப்பட்ட; வாள் கண்– வாள் போலும் கண்களை உடைய; மயில் நின்று என– ஒரு மயில் வந்து நின்றது போல, வந்து என் முன்னர்– என் முன் வந்து; இந்நின்றவள் ஆம் கொல்– இதோ நிற்கின்றாளே; இவள்தானா? இயம்பிய சீதை– நீ சொன்ன சீதை.

“பேதாய்! பெண்ணைப் பற்றிக் கேட்கிறேன் நான், ஆணைப் பற்றிச் சொல்கிறாய் நீ. நாம் தான் மாயம் செய்வதில் வல்லவர் என்றால் மானிடர் நம்மினும் வல்லவரோ? நம்மிடமே வந்து மாயம் செய்கிறார்?”

இவ்வாறு கூறினான் இராவணன். அவனோ அந்தச் சீதையையே எண்ணி அவள் தன் எதிரே வந்து நிற்பாள் போல் காண்கிறான்; அவளோ இராமனையே இடை-

3