பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39




“வெப்பு அழியாத என் நெஞ்சும்
        உலந்தேன்; விளிகின்றேன்;
ஒப்பு இலர் என்றே
        போர் செயல் ஒல்லேன்; உடன் வாழும்
துப்பு அழி செவ்வாய் வஞ்சியை
        வெளவத் துணை கொண்டிட்டு
இப்பழி நின்னால் தீரிய
        வந்தேன் இவண்” என்றான்.

“மேற்கூறிய நிகழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்டுள்ள மனக்கொதிப்பு அழியவில்லை. மனமும் அழிந்தேன்; இறக்கும் நிலையில் உள்ளேன்.

அவர்களுடன் போர் செய்ய விருப்பம் இலேன். காரணம் அம்மானுடர் எனக்கு நிகரானவர் அல்லர். ஆயினும் அவர் பால் உள்ள வஞ்சிக்கொடி போன்றாளை வவ்வி கொண்டுவர முடிவு செய்துளேன். இவ்வாறு செய்வதன் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ள பழி தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு உனது துணை வேண்டி இங்கே வந்துளேன்” என்றான்.

வெப்பு அழியாது - (மேற் கூறிய நிகழ்ச்சிகளால்) எனக்கு உண்டான மனக் கொதிப்பு அழியாமல்; நெஞ்சும் உலந்தேன் - மனமும் அழிந்தேன்; விளிகின்றேன் - அதனால் நான் இறந்து அழியும் நிலையில் இருக்கின்றேன்; ஒப்பு இலர் என்றே - எனக்கு அம்மானுடர் நிகரானவர் அல்லர் என்று கருதியே போர் செய ஒல்லேன் - அவரோடு போர் செய்ய விருப்பமில்லாதவனாக இருக்கின்றேன்; உடன் வாழும் - அம்மானிடரோடு வாழ்கின்ற; துப்பு அழி செவ்வாய் - பவழத்தைத் தோல்வியுறச் செய்யும் சிவந்த வாயுடைய; வஞ்சியை - கொடி போன்றாளை, வவ்வு -