பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நன்மை தரத்தக்க இதனை நான் உனக்குக் கூறுவேன்; என்ன - என்று கூறி; அன்னவனுக்கு - அந்த இராவணனுக்கு; துணிவு எல்லாம் - உறுதியளிக்கும் நல்ல புத்தியாகிய நீதி அனைத்தும் சொன்னான் - எடுத்துக் கூறினான் மாரீசன்.


திறத் திறனாலே செய்தவம்
        முற்றித் திரு உற்றாய்;
மறத்திறனாலே சொல்லுதி;
        சொல் ஆய்; மறை வல்லாய்!
அறத் திறனாலே எய்தினை
        அன்றோ அது; நீயும்
புறத்திறனாலே பின்னும்
        இழக்கப் புகுவாயோ?

“நீ இப்போது பெற்றுள்ள செல்வமும் சீரும் தர்ம வழியிலே அறத்தினாலே வந்தவை. அவைகளை இந்த மறவழி பின்பற்றி இழக்கத் துணிவாயோ? சொல்?” என்றான்.

மறைவல்லோய் - வேதங்களை (நன்கு) அறிந்தவனே! திறம் திறனாலே - மிகத் திறமையினாலே; செய்தவம் முற்றி - செய்யக் கூடிய தவங்களையெல்லாம் செய்து முடித்து; திரு உற்றாய் - நீ இப்பொழுது பெற்றுள்ள சீரும் செல்வமும் பெற்றுள்ளாய்; மறத்தினாலே - அதர்மத்தினால் (உன் கொடிய வலிமையை மேற்கொண்டு) சொல்லுதி - இவ்வாறு சொல்கிறாய்; அறத்திறனாலே எய்தினை அன்றோ? - நீ செய்த அறத்தின் வலிமையினாலே இச் செல்வச் சிறப்பினை அடைந்தாய் அன்றோ? அது - அச் செல்வ வாழ்க்கையை; புறத்திறனாலே - அறத்திற்குப்