பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


ஐயா! - ஐயனே! நிகழ்ந்ததை - நடந்ததை நினைக்கிலை-நினைத்தாய் இல்லை; அஞ்சாது - அச்சம் இல்லாது; என் நெஞ்சின் நிலை - எனது மனநிலையை இகழ்ந்தனை - இகழ்ந்து கூறினாய்; எனக்கு இளைய நங்கை - எனக்கு இளையவளான தங்கை சூர்ப்பனகையின்; முகம் எங்கும் - முகம் எல்லாம்; அகழ்ந்தவரை ஒப்பு உற - தோண்டப்பட்ட மலையில் உள்ள மேடு பள்ளங்கள் போல விளங்க; அமைத்தவரை - செய்தவரான அந்த மானிடரை; புகழ்ந்தனை - என்னிடமே புகழ்ந்து பேசினாய் தனிப் பிழை - ஒப்பற்ற பிழை; இது பொறுத்தனன் - இந்தப் பெரும் பிழை பொறுத்தேன்; என்றான் - என்று கூறினான் இராவணன்.


தன்னை முனிவுற்ற தறுகண்
        தகவு இலோனைப்
பின்னை முனிவுற்றிடும் எனத்
        தவிர்தல் பேணான்
“உன்னை முனிவுற்று, உன்
        குலத்தை முனிவுற்றாய்
என்னை முனிவுற்றிலை; இது என்?”
        என இசைத்தான்.

தன் பால் சினம் கொண்டு சீறிய இராவணன் மேலும் சீறுவானோ என்று மாரீசன் அஞ்சினான் அல்லன். அவனுக்கு நலன் கூறுவதை விடுத்தான் அல்லன். “நீ என் மீது சீறினாய் அல்லை; உன் மீது சீற்றம் கொண்டாய். உன் குலத்தின் மீது சினங்கொண்டாய். நீ இச் செயல் புரிய முற்பட்டது ஏன்?” என்று இதமாகக் கூறினான்.

தன்னை முனி உற்ற - தன்பால் சினம் கொண்ட தறு கண் தகவு இலோனை - அஞ்சாத நேர்மையற்ற அவ்-