பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

விராவணனை ; பின்னை முனிவுற்றிடும் - மேலும் தன் மீது சினம் கொள்வான் என்று; தவிர்தல் பேணான் - அவனுக்கு நலம் கூறுவதை விடாதவனாய்; (அந்த மாரீசன் இராவணனை நோக்கி) என்னை முனிவுற்றிலை - என் மீது நீ கோபிக்கவில்லை; உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய் - உன்னையே கோபித்துக்கொண்டாய் உன் குலத்தைக் கோபித்தாய்; இது என்? நீ இச் செயல் புரியத் துணிவது ஏன்? என்று இசைத்தான் - என்று இதமாகக் கூறினான்.

எடுத்த மலையே நினையின்
        “ஈசன் இகல் வில்லாய்
வடித்த மலை; நீ இது வலித்தி”
        என வாரிப்
பிடித்து அமலை நாண் இடை
        பிணித்து, ஒருவன் மேல் நாள்
ஒடித்த மலை அண்ட முகடு
        உற்ற மலை அன்றோ?

கயிலை மலை இமயமலையின் ஒரு சிகரம். அதனை எடுத்ததையே நீ பெரிதாகப் பாராட்டினால் - பெருமை படுவாயானால், மனிதன் என்று நீ எந்த இராமனை இழித்துக் கூறுகிறாயோ அந்த இராமன் பதினாறு வயது பாலனாய் இருந்த காலத்திலே சீதையின் சுயம்வரத்திலே எடுத்து வளைத்த நிலையில் அந்த வேகம் தாங்காது ஒடிந்து போன மலை போன்ற அச் சிவ தனுசு எது? ஆகாய முகடு அளாவியதும் மலைகளுள் சிறந்ததும், பெரியதுமான மேருமலை அன்றோ?”

இவ்வாறு இராமனின் ஆற்றவை எடுத்துக் கூறினான் மாரீசன்.