பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52



எடுத்த மலையே நினையின் - நீ எடுத்த கயிலாயமலையையே நினைத்துப் பெருமை கொள்வாய் என்றால்; இது ஈசன் வில்லாய் வடித்த மலை - இதுவே சிவபெருமான் போர் செய்வதற்கு வில்லாக வடித்துக் கொண்ட மலை; நீ இது வலித்தி என - நீ இதை வளைத்து நாண் ஏற்று என விசுவாமித்திரர் கூற; ஒருவன் - நீ இழித்துக் கூறும் ஒருவனாகிய (மானிடனாகிய) இராமன்; மேல் நாள் - முன் ஒரு நாள்; வாரி - அதனை எளிதில் எடுத்து;பிடித்து - கையில் பிடித்து; அம்மலை இடை நாண் பிணித்து - அந்த மலையிடையே நாணேற்றி; (வளைக்கத் தொடங்கிய நிலையில்) ஒடித்த மலை - ஒடித்த அவ்வில்லாகிய மலை; அண்ட முகடு உற்ற - இவ்வண்டத்தின் உச்சியைத் தொட்டு உயர்ந்த; மலை அன்றோ - மேரு மலைக்கு நிகரானது அன்றோ?


யாதும் அறியாய்; உரை கொளாய்
        இகல் இராமன்
கோதை புனையா முன் உயிர்
        கொள்ளை படும் அன்றே
பேதை மதியால் “இஃது ஓர்
        பெண் உருவம்” என்றாய்;
சீதை உருவோ? நிருதர்
        தீவினை அன்றோ?

இராமனின் ஆற்றலைப் பற்றி நீ ஏதும் அறியாய்; நான் சொல்லும் நல்லுரையும் ஏற்றுக்கொள்ள மாட்டாய்; இராமன் போருக்கு எழு முன்பே நம் அரக்கர் குலம் அழியும் என்பது உறுதி. நீ அபகரித்து கொண்டு வர எண்ணும் சீதையை ஒரு பெண் உருவம் என்று கருதுகின்றாய்; “புத்தி கெட்டவனே! அது சீதை உரு அன்று அரக்கர் செய்த