பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

தீவினை அல்லவா பெண் உருக்கொண்டு சீதை எனும் பெயர் தாங்கி வந்துளது.”

யாது அறியாய் - இராமனின் ஆற்றல் பற்றி நீ ஏதும் அறிய மாட்டாய்; உரை கொளாய் - நான் கூறும் நல்லுரைகளையும் நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய்; இகல் இராமன் - போரில் வல்ல இராமன்; கோதை புனையாமுன் - போர்க்கு எழக் கையுறை அணியா முன்பே; ( அதாவது போரணி பூணத் தொடங்கும் அந்த நேரத்திலேயே) உயிர் கொள்ளை படும் அன்றே - அரக்கர்களாகிய நமது உயிர் அனைத்தும் அழிக்கப்படும் என்பது உறுதி; பேதை மதியால் - உன் மூட மதியால்; இஃது ஓர் பெண் உருவம் என்றாய் - இது ஓர் பெண் உருவம் என்றாய்; (நீ அபகரித்து வரக் கருதும் சீதை ஒரு பெண் வடிவம் என்று கருதியுள்ளாய்) சீதை உருவோ - அது சீதை எனும் பெண் உருவமோ? (அன்று) நிருதர் தீவினை அன்றோ - அரக்கர்களாகிய நம்மவர் செய்த பாவமே சீதை உருவம் பெற்று வந்துளது அன்றோ.


உஞ்சு பிழையாய் உறவினோடும்
        என உன்னா
நெஞ்சு பறை போதும்; அது
        நீ நினைய கில்லாய்
அஞ்சும் எனது ஆருயிர்
        அறிந்து அருகு நின்றார்
 நஞ்சு நுகர் வாரை “இது
        நன்று” எனலும் நன்றே?

சீதையைத் தூக்கி வந்தால் நீ உயிர் வாழமாட்டாய். உறவினரோடும் அழிவாய். அதனை எண்ணிப் பார்க்கும்