பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

திறன் உனக்கு இல்லை. உன் நிலை கண்டு எனது ஆருயிர் அஞ்சுகின்றது. என் மனம் பறை அடிப்பதுபோல் துடிக்கின்றது. உனக்குச் சாதகமாக நான் பேசுவது என்பது விஷம் குடிப்பவரைப் பார்த்து அருகில் நின்றார், “இது நன்று” என்று சொல்வது ஒக்கும். அது நன்றோ?

உறவினோடும் உஞ்சு பிழையாய்-(இக்காரியம் செய்தால்) நீ உன் உறவினரோடும் பிழைக்கமாட்டாய் (அழிவாய்) என- என்று; உன்னா - எண்ணி; நெஞ்சு பறை மோதும் - எனது நெஞ்சு பறையடிப்பதுபோல் துடிக்கிறது; நீ அது நினைய கில்லாய் - நீ அதை நினைக்கின்றாயில்லை; (அத் தீமையை எண்ணும் திறமையில்லாதவன் ஆனாய்) அஞ்சும் எனது ஆருயிர் - (உன் நிலை கண்டு) எனது அரிய உயிர் அஞ்சுகின்றது; (உனக்கு இணங்கி நான் பேசுவது என்பது) நஞ்சு நுகர்வாரை அறிந்து - விஷம் அருந்துவாரைத் தெரிந்து: அருகு நின்றார் - அருகில் நிற்பவர்; இது நன்று என்னலும் - இது நல்லது என்று கூறுவதும் நன்றே இதனினும் நல்லது ஆகும்.


என்ன உரை இத்தனையும்
         எத்தனையும் எண்ணிச்
சொன்னவனை ஏசின
         அரக்கர் பதி சொன்னான்;
அன்னை உயிர் செற்றவனை
         அஞ்சி உறைகின்றாய்
உன்னை ஒருவற்கு ஒருவன்
         என்று உணர்கை நன்றோ?

இவ்வாறு நன்கு யோசித்து நல்லுரை பகர்ந்த மாரீசனை நோக்கி அரக்கர் பதியான இராவணன் கூறுகின்றான், “உன்