பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தாயைக்‌ கொன்றான்‌ அந்த இராமன்‌. அவனுக்கு அஞ்சி இங்கு வந்து மறைந்து நீ வாழ்கின்றாய்‌ போர்‌ செய்யும்‌ திறம்‌ கொண்ட ஒருவன்‌ என்று உன்னை மதித்து வருதல்‌ நன்றோ?”

என்ன – என்று மாரீசன்‌ சொன்ன; உரை இத்தனையும்‌– அறிவுரைகள்‌ இவ்வளவையும்‌; எத்தனையும்‌ எண்ணி எல்லா விதங்களாலும்‌ ஆலோசித்து; சொன்னவனை – சொன்ன மாரீசனை; ஏசினன்‌ – ஏசினவனாய்‌; அரக்கர்‌ பதி – அரக்கர்‌ தம்‌ அரசனான இராவணன்‌; சொன்னான்‌ – பின்‌ வருமாறு கூறினான்‌; அன்னை உயிர்‌ செற்றவனை – உன்‌ தாயாகிய தாடகையின்‌ உயிரைப்‌ போக்கிய அந்த இராமனுக்கு; அஞ்சி – பயந்து; உறைகின்‌றாய்‌ – இங்கு வந்து தவம்‌ செய்பவன்போல்‌ மறைந்து வாழ்கின்றாய்‌; உன்னை – அத்தகைய பேதையாகிய உன்னை; ஒருவற்கு ஒருவன்‌ என்று – போர்‌ செய்வதற்கு உரிய ஆண்‌ மகன்‌ என்று; உணர்‌கை – மதித்தல்‌; நன்றோ – சிறப்புடையது ஆகுமோ?


“மறுத்தனை எனப்‌ பெறினும்‌
       நின்னை வடி வாளால்‌
ஒறுத்து மனம்‌ உற்றது முடிப்பென்‌
       ஓழிகல்‌ லேன்‌;
வெறுப்பன கிளத்தல்‌ உறும்‌
       இத்தொழிலை விட்டு என்‌
குறிப்பின்‌ வழி நிற்றி; உயிர்‌
       கொண்டு உழலின்‌” என்றான்‌.

“எனது நோக்கப்படி நடக்க நீ மறுத்தனையாகின்‌ எனது வாளால்‌ உன்‌னைக்‌ கொன்று நான்‌ கருதியதை