பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

முடிப்பேன். அவ்வாறு செய்யாமல் இவ்விடம் விட்டு அகல மாட்டேன். ஆதலின் நீ உயிருடன் வாழ விரும்பினால் எனக்குப் பிடிக்காத இந்த உபதேசம் செய்யும் தொழிலை விட்டு என் வழி நிற்பாயாக, என் நோக்கப்படி நடப்பாயாக” என்றான் இராவணன்.

மறுத்தனை எனப் பெறினும்– எனது கருத்துக்கு ஏற்ப நடக்க மறுத்தாய் எனினும்; நின்னை– உன்னை; வடிவாளால்– எனது கூறிய வாளினால்; ஒறுத்து– அழித்து; மனம் உற்றது– என் மனம் கருதியதை; முடிப்பென்– செய்து முடித்தே தீருவன்; ஒழிகில்லேன்– இதனைச் செய்யாமல் விடமாட்டேன்; ஆதலின்– ஆதலினால்; உயிர் கொண்டு உழலின்– நீ உயிரோடு வாழ விரும்பினால்; வெறுப்பன கிளத்தல் உறும்– நான் வெறுப்பனவற்றைச் சொல்லும் இத் தொழிலை விட்டு; நீ எனக்கு உபதேசம் செய்யும் தகாத இத்தொழிலை விட்டு; என்குறிப்பின் வழி– என் நோக்கின்படி; நிற்றி– நின்று நடப்பாயாக; என்றான்– என்று கூறினான் இராவணன், (மாரீசனை நோக்கி)

“ஆண்டையான் அனைய கூற
       அரக்கர் ஓர் இருவரோடும்
பூண்ட என் மானம் தீரத்
       தண்டகம் புக்க காலைத்
தூண்டிய சரங்கள் பாயத்
       துணைவர் பட்டு உருள அஞ்சி,
மீண்ட யான் சென்று செய்யும்
       வினை என் கொல்? விளம்புக”
                                                    என்றான்.