பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அணிந்த; தம்பி – தம்பியாகிய இலட்சுமணனும்‌; பின்‌ சென்றனன்‌ – பின்னே தொடர்ந்து சென்றான்‌; (அப்பொழுது) கடக்க ஒண்ணா – விலக்க முடியாத; வினைஎன – ஊழ்வினை என்று; வந்து – வந்து; நின்ற மான்‌ – நின்ற மாரீசனாகிய மான்‌; எதிர்‌ – அவர்களை நோக்கி; விழித்தது – விழித்துப்‌ பார்த்தது.


என்‌ ஒக்கும்‌ என்னல்‌ ஆகும்‌?
      இளையவ! இதனை நோக்காய்‌;
தன்‌ ஒக்கும்‌ என்பது அல்லால்‌
      தனை ஒக்கும்‌ உவமை உண்டோ?
பல்‌ நக்க தரளம்‌ ஓக்கும்‌;
      பசும்‌ புல்‌ மேல்‌ படரும்‌ மெல்‌ நா
மின்‌ ஒக்கும்‌; செம்‌பொன்‌ மேனி
      வெள்ளியின்‌ விளங்கும்‌ புள்ளி.

உடன்‌ வந்த தம்பியை நோக்கிச்‌ சொல்கிறான்‌ இராமன்‌ “தம்பீ! இந்த மானை உற்று நோக்குவாயாக, இதற்கு ஓப்‌பானது எது? எதுவுமில்லை. இதன்‌ பற்கள்‌ முத்துப்போல்‌ உள்ளன. நாக்கு மின்னல்‌ போல உள்ளது; மேனி செம்பொன்‌ போன்றுளது. புள்ளிகளோ நக்ஷத்திரங்கள்‌ போல்‌ ஒளி வீசுகின்றன”

இளையவ! – தம்பீ! இதனை நோக்காய்‌ – இந்த மானை உற்று நோக்குவாயாக; தன்‌ ஒக்கும்‌ – இதற்கு நிகர்‌ இதுலே; என்பது அல்லால்‌ – என்று சொல்வது தவிர; (வேறு) என்‌ ஒக்கும்‌ என்னவாகும்‌? – எதை இதற்கு ஒப்புமை சொல்லலாகும்‌? தனை ஒக்கும்‌ உவமை உண்டோ? – இதற்கு ஏற்‌ற உவமை சொல்வதற்கு உண்டோ? (இல்லை);