பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

பல்‌ – இதன்‌ பற்கள்‌; நக்க தரளம்‌ ஒக்கும்‌ – ஒளி வீசும்‌ முத்துகளுக்கு ஒப்பாகும்‌; பசும்‌ புல்‌ மேல்‌ படரும்‌. பசும்‌ புல்லைத்‌ தின்பதற்கு அதன்‌ மேல்‌ செல்லும்‌; மென்நா – மெல்லிய நாக்கு; மின்‌ ஒக்கும்‌ – மின்னலுக்கு ஒப்பாகும்‌; மேனி செம்பொன்‌ – இதன்‌ உடலோ சிவந்த பொன்‌ போன்றுள்ளது: புள்ளி – இதன்‌ உடலில்‌ அமைந்துள்ள புள்ளி; வெள்ளியின்‌ விளங்கும்‌ – வெள்ளிபோல்‌ ஒளி வீசுகின்றது.


ஆரியன்‌ அனைய கூற
       அன்னது தன்னை நோக்கிச்‌
‘சீரியது அன்று இது’ என்று
       சிந்தையில்‌ தெளிந்த தம்பி
“காரியம்‌ என்னை? ஈண்டுக்‌ கண்டது
       கனக மானேல்‌
வேலி அம்‌ தெரியல்‌ வீர
       மீள்வதே மேன்மை” என்றான்‌.வ

இராமன்‌ அல்வாறு கூறிய உடனே அம்‌ மானைப்‌ பார்த்துத்‌ தன்‌ சிந்தையிலே ஒரு முடிவு கொண்ட தம்பியாகிய லட்சுமணன்‌ “இது பொன்‌ மான்‌ ஆயின்‌ இதனால்‌ நமக்கு ஆக வேண்டியது யாது? ஒன்றுமில்லை, ஆகவே இதிலே சிந்தை பறி கொடாது திரும்புவதே நாம்‌ செய்தகு சீரிய செயலாகும்‌” என்றான்‌.

ஆரியன்‌ அனைய கூற - மேலோனாகிய இர௱மன்‌ அவ்வாறு கூறவும்‌; அன்னது தன்னைநோக்கி – ௮ம்‌ மானைப்‌ பார்த்து; சிந்தையில்‌ தெளிந்த தம்பி – தெளிந்த சிந்தையுடைய தம்பியாகிய லட்சுமணன்‌; வேரி அம்‌ தெரியல்‌ வீர – நல்ல மணமும்‌ அழகும்‌ கொண்ட மாலையணிந்த