பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

வீர; ஈண்டு கண்டது– இங்கே பார்த்தது; கனக மானேல்‌– பொன்‌ மானே ஆயின்‌; காரியம்‌ என்னை?– இதனால்‌ நமக்கு ஆக வேண்டியது எது? (ஒன்றுமில்லை– ஆகவே) மீள்வதே– நாம்‌ இதனை விட்டும்‌ பர்ணசாலைக்குத்‌ திரும்பச்செல்வதே; மேன்மை– மேலான செயல்‌; என்றான்‌– என்று சொன்‌னான்‌.


அற்று அவன்‌ பகரா முன்னம்‌
       அழகனை அழகியாளும்‌
‘கொற்றவன்‌ மைந்த; மற்றிக்‌
       குழைவுடை உழையை, வல்லை
பற்றினை தருதி ஆயின்‌
       பதியிடை அவதி எய்தப்‌
பெற்றுழி இனிது உண்டாடப்‌
      பெறற்கு அருந்தசைமைத்து’என்றாள்‌.

அப்படி இலட்சுமணன்‌ சொன்ன உடனே அழகில்‌ சிறந்த இராமனைப்‌ பார்த்து அழகில்‌, சிறந்த சீதை சொல்கிறாள்‌:

“சக்கரவர்த்தி திருமகனே! விரைவிலே இந்த மானைப்‌ பிடித்துத்‌ தருவீராயின்‌ . நமது வனவாசம்‌ முடித்து அயோத்திக்குத்‌ திரும்பச்‌ சென்று வாழும்போது மகிழ்ந்து விளையாடத்‌ தக்கதாயிருக்கும்‌.”

அற்று அவன்‌ பகரா முன்னம்‌– அவ்வாறு அந்த லட்சமணன்‌ சொல்‌லும்‌ அளவிலே; அழகனை– அழகில்‌ சிறந்த இராமனை; அழகியாளும்‌– அழகே வடிவு கொண்டு வந்த சீதையும்‌; கொற்றவன்‌ மைந்த– சக்கரவர்த்தி திருமகனே! குழைவு உடை– இப்பொழுது தளர்ந்த நிலையில்‌ உள்ள; இ உழையை– இம்‌ மானை? வல்லை–