பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

செலவிற்கு; ஒரு கல்வி வேறே காட்டியது ஒத்தது – கற்றறிய வேண்டிய ஒரு புதிய பாடத்தைத் தனிப்பட்ட முறையில் காட்டியதை; ஒத்து – ஓட்டம் எடுத்தது.


குன்றிடை இவரும்; மேகக்
        குழுவிடைக் குதிக்கும்; கூடச்
சென்றிடின் அகலும்; தாழின்
        தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்
நின்றதே போல நீங்கும்
        நிதி வழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர்
        மனம் எனப் போயிற்று, அம்மா!

அந்த மாயமான் மலைமீது ஏறும்; மேகக் கூட்டங்களின் இடையே தாவிக் குதிக்கும். கூடச் சென்றால் வெகுதொலைவில் ஓடிவிடும்; அருகில் வந்து நிற்கும்; கையால் பற்றிவிடும் நிலையில் வரும்; நிற்கும். அருகில் சென்றால் ஓடிவிடும். ஓரிடத்தே நில்லாது பணமுடையவர்களையே நாடி அலையும் விலை மகளிர் மனம்போல அம் மானும் பாசாங்குகள் பல செய்து ஓரிடத்தும் நில்லாது அவ்வனம் எங்கும் சுற்றித் திரிந்தது.

அ மான் – அந்த மாயமான்; குன்று இடை இவரும் – மலையின் மீது ஏறும்; மேக குழு இடைக் குதிக்கும் – மேகக் கூட்டங்களின் இடையே தாவிக் குதிக்கும்; கூடச் சென்றிடின் – அதனோடு கூடப்போனால்; அகலும் – நீண்ட தூரம் ஓடிப்போகும்; தாழில் – சற்றுத் தாமதித்தால்; தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் – கையால் பற்றிவிடும் நிலையில் அருகே வந்து நிற்கும்; நின்றதேபோல நீங்கும் –