பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73



எயிறு – பற்கள்; அலைத்தது – மூடி அசைதல் கொண்ட; முழை திறந்து – குகை போன்ற தன் வாய் திறந்து; ஏங்கிய – முழங்கிய; செயிர்தலை கொண்ட சொல் – குற்றம் மேற்கொண்ட அம் மாரீசனின் கூக்குரல்; செவி சேர்தலும் – காதில் விழுந்த உடனே; குயில் – ஒரு குயிலானது; தலத்து இடை உற்றது – தான் இருந்த மரத்தினின்றும் தரையிலே வீழ்ந்தது போல; ஓர் கொள்கையாள் – ஒரு துயர் நிலை அடைந்தவளாய்; வயிறு அலைத்து – தன் வயிற்றைக் கைகளால் புடைத்துக்கொண்டு; விழுந்து – தரையில் விழுந்து; மயங்கினாள் – மயக்கமுற்றாள்.


‘பிடித்து நல்கு இவ் உழை
        எனப் பேதையேன்
முடித்தனென் முதல் வாழ்வு’
        என மெய் அழல்
கொடிப் படிந்தது என,
        நெடுங்கோள் அரா
இடிக்கு உடைந்தது
        எனப் புரண்டு ஏங்கினாள்.

“நீயே இந்த மானைப் பிடித்து வந்து எனக்குக்கொடு என்று சொல்லி அறிவு கெட்டவள் ஆனேனே! என் வாழ்வுக்கு ஆதாரமான கணவன் அழியும் படியான காரியத்தைச் செய்து விட்டேனே!” என்று கூறி நெருப்பிலே பட்ட கொடிபோலவும், இடியோசை கேட்ட பாம்பு போலவும் வலிவிழந்து தரையிலே புரண்டு அழுதாள்.

இ உழை – இந்த மானை; பிடித்து நல்கு – நீயே பிடித்து வந்து எனக்குக் கொடு; என் – என்று; பேதையேன் – அறிவு