பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

இல்லாத நான்; முதல் வாழ்வு – என் வாழ்வுக்கு ஆதாரமாயுள்ள என் கணவனை; முடித்தனென் – அழியும் படியான செயலைச் செய்து முடித்து விட்டேனே; என – என்று கூறி; மொய் அழல் கொடி படிந்தது என – எழுநா விட்டு எரியும் தீ ஒன்று; ஒரு பூங்கொடியைப் பற்றிக்கொண்டது போலவும்; நெடுங்கோள் அரா – நீண்ட வலிய பாம்பு ஒன்று; இடிக்கு உடைந்தது என – இடி முழக்கம் கேட்டு வலிவிழந்து வருந்திக் கிடந்தது போலவும்; புரண்டு – தரையிலே கிடந்து புரண்டு; ஏங்கினாள் – வருந்தி அழுதாள்.


“குற்றம் வீந்த குணத்தின்
        எம் கோமகன்
மற்றை வாள் அரக்கன்
        புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன்
        என்னவும், என் அயல்
நிற்றியோ? இளையோய்
        ஒரு நீ” என்றாள்.

“குற்றம் என்பது இல்லாத குணக்குன்றாய் என் தலைவன் மாற்றார் செய்த சூழ்ச்சியால் வீழ்ந்தான். அவனது குரல் கேட்டும் தம்பியாகிய நீ இங்கு நிற்பாயோ” என்று கடிந்து கொண்டாள் சீதை. யாரை நோக்கி? இளையவனாகிய லட்சுமணனை நோக்கி.

குற்றம் வீந்த – குற்றம் என்பது இல்லாத: குணத்தின் – நல்ல குணங்களை உடைய, எம் கோமகன் – என் தலைவன்; மற்றை – வேறுபட்ட (அதாவது பகைவனான) வாள் அரக்கன் – கொடிய அரக்கன்; புரிமாயையால் –