பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80குளத்திலே மலர்ந்திருக்கிற தாமரைக் காட்டிலே தாவும் அன்னம் போல ஓடினாள் சீதை எங்கே? காட்டிலே புகைவிட்டு எரியும் தீ நோக்கி. எதற்கு? தீயிலே விழுந்து உயிர்விட; அப்போது இளைய பெருமாள் பூமியிலே விழுந்து வணங்கி, சீதையைத் தடுத்து நிறுத்திப் பின்வருமாறு சொன்னான்.

தாமரை வனத்திடை – குளத்திலே உள்ளதொரு செந்தாமரைக் காட்டிலே; தாவும் – தாவியோடும்; அன்னம் போல் – அன்னப் பறவை போல; தூம வெம் காட்டு எரி – புகை சூழ்ந்த காட்டுத் தீயினிடத்திலே; தொடர்கின்றாள் – செல்லத் தொடங்கினாள்.

தனை – அவ்வாறு உயிர் விடச் சென்ற சீதையை; சேம வில் குமரனும் – சீதையைப் பாதுகாத்தல் கருதி வில்லேந்தி நின்ற இளைய பெருமாள்; விலக்கி – தடுத்து; சிறு அடி பூ முகம் – சிறிய அடிகளாகிய தாமரை மலர் முன்னே; நெடு நிலம் புல்லி – பூமியிலே விழுத்து வணங்கி; சொல்லுவான் – பின் வருமாறு சொல்லத் தொடங்கினான்.

“துஞ்சுவது என்னை? நீர்
        சொற்ற சொல்லை யான்
அஞ்சுவென்; மறுக்கிலென்;
        அவலம் தீர்ந்து இனி
இஞ்சு இரும்; அடியனேன்
        ஏகுகின்றனென்;
வெஞ்சின விதியினை
        வெல்ல வல்லமோ?”

நீவிர் உயிர் துறப்பது ஏன்? வேண்டாம்; நீவிர் கூறிய சொற்களுக்கு நான் அஞ்சுகிறேன். உமது கட்டளையை