பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

நான் மறுக்கவில்லை. போகின்றேன். விதி வலிது. அதை வெல்ல நம்மால் முடியுமோ? (முடியாது)

துஞ்சுவது – நீவிர் இறப்பது; என்னை – ஏன்? நீர் சொற்ற சொல்லை – நீவிர் சொன்ன சொல்லுக்கு; யான் அஞ்சுவென் – நான் பயப்படுகிறேன்; மறுக்கிலேன் – நீவிர் இட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிய நான் மறுத்தேன் அல்லன். இனி – இனிமேல்; அவலம் தீர்ந்து – உம்முடைய வருத்தம் நீங்கி; இஞ்சு இரும் – இங்கே இருப்பீராக; அடியனேன் ஏகுகின்றனன் – நான் செல்கிறேன்; வெஞ்சின விதியை – மிக்க சினத்துடன் நம்மீது சீறி வரும் விதியை; வெல்ல வல்லமோ? – வெல்லும் வல்லமை நமக்குளதோ. (இல்லை)

போகின்றேன் அடியனேன்
        பொருந்தி வந்து, கேடு
ஆகின்றது; அரசன் தன்
        ஆணை நீர் மறுத்து
“ஏகு” என்றீர்; இருக்கின்றீர்
        தமியிர் என்று, பின்
வேகின்ற சிந்தையான்
        விடை கொண்டு ஏகினான்.

எனது ஐயன் இராமனுடைய கட்டளை ‘இங்கே இரு’ என்பது; அதை மீறி “ஏகு” என்கிறீர். துணை எவருமின்றி இருக்கிறீர். வேகின்ற சிந்தையோடு போகின்றேன். விடையும் கொண்டேன் என்று சொல்லிப் போனான் லட்சுமணன்.

அடியனேன் போகின்றேன் – அடியேன் இப்போதே போகின்றேன்; கேடு – ஒரு பெருங்கேடு; பொருந்தி வந்து