பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

படுகிறீர். இந்தக் கொடிய காட்டிலே நடந்து வந்ததால் களைப்புற்றிருக்கிறீர். நீவிர் எங்கிருந்து எங்கிருந்து இங்கு வருகின்றீர்” என்று கேட்கிறாள்.

அனையன உரைத்த– அவ்விதம் கூறிய; ஆய் இழை– சீதை; அவ்வழி– அப்போது; (அந்த இராவண சந்நியாசியை நோக்கி) விளைந்த மூப்பினிர்– பழுத்த முதுமையுடையீர்; இ வழி– இத் தவ வழியிலே; இருவினை கடக்க எண்ணினீர்– இரு வினைகளையும் கடக்கக் கருதியுள்ளீர்; எவ் வழி நின்றும் இங்கு எய்தினீர்– எங்கிருந்து இங்கு வந்தீர்?; வெவ்வழி வருந்தினீர்– கொடிய இக் காட்டு வழி நடந்ததால் இளைப்புற்றவராகக் காணப்படுகிறீர்; என்றாள்– என்று கேட்டாள்.

“இந்திரற்கு இந்திரன்;
        எழுதல் ஆகலாச்
சுந்தரன்; நான் முகன்
        மரபில் தோன்றினான்.
அந்தரத் தோடும் எவ்
        உலகும் ஆள்கின்றான்;
மந்திரத்து அருமறை
        வைகும் நாவினான்.”

தேவர் எல்லாருக்கும் அரசன் தேவேந்திரன்; அவனுக்கு அரசன் இராவணேசுவரன்; ஓவியத்தில் எழுத முடியாத சுந்தர ரூபன்; பிரமன் வமிசத்திலே தோன்றியவன்; வானுலகோடு ஏனைய உலகம் யாவும் ஆள்கின்றான். வேதங்களை நன்கு அறிந்தவன்.