பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


அதாவது மனிதரால் அஃது இயலாது என்பது பொருள்.

சீற்றம் கொண்ட இராவண சந்நியாசி மேலும் சொல்கிறான்:

“மேருவைப் பறிக்க வேண்டின்
        விண்ணினை இடிக்க வேண்டின்
நீரினைக் கலக்க வேண்டின்
        நெருப்பினை அவிக்க வேண்டின்
பாரினை எடுக்க வேண்டின்
         பால் நிகர் செம்சொல் ஏழாய்
யார் எனக் கருதி சொன்னாய்
         இராவணற்கு அரிது என்?”
                                                       என்றான்.

“மகா மேரு மலையை அடியோடு பெயர்த்து எடுக்க விரும்பினாலும் சரி; வான மண்டலத்தை இடித்து நொறுக்க விரும்பினாலும் சரி; கடல்களைக் கலக்க விரும்பினாலும் சரி; அக் கடலிலே உள்ள வடவா மகாக்கினியை அவிக்க விரும்பினாலும் சரி; பூமியை பெயர்த்தெடுக்க விரும்பினாலும் சரி; அந்த இராவணனுக்கு இவை ஏதும் அரிய செயல் அல்ல. இராவணனை நீ யார் என்று நினைத்து இந்த வார்த்தை சொன்னாய்; பால் போலும் சுவை மிகு சொல்லுடைய பெண்ணே!”

பால் நிகர் செம் சொல் ஏழாய்– பால் போலும் சுவையுள்ள சொற்களையுடைய பெண்ணே! யார் எனக் கருதி சொன்னாய்– அந்த இராவணனை யார் என்று எண்ணி இவ் வார்த்தை சொன்னாய்; மேருவைப் பறிக்க வேண்டின்– மகா மேரு பர்வதத்தைப் பறித்து எடுக்க விரும்பினாலும்; விண்ணினை இடிக்க வேண்டின்– வான மண்டலத்தை