பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105


“அரண்‌ தரு திரள்‌ தோள்‌ சால
        உள எனின்‌ ஆற்றல்‌ உண்டோ?
கரண்ட நீர்‌ இலங்கை வேந்தைச்‌
        சிறை வைத்த கழல்‌ கால்‌ வீரன்‌
திரண்ட தோள்‌ வனத்தை எல்லாம்‌.
        சிறியது ஓர்‌ பருவம்‌ தன்னில்‌
இரண்டு தோள்‌ ஒருவன்‌ அன்றோ
        மழுவினால்‌ எறிந்தான்‌?” என்றாள்‌.

“திரண்டதோள்கள்‌ இருந்து விட்டால்‌ மட்டும்‌ போதுமா? திறமை உண்டாகி விடுமா? அதே இராவணனைக்‌ கார்த்த வீரியார்ச்சுனன்‌ சிறை வைக்கவில்லை? அந்தக்‌ கார்த்த வீரியார்ச்சுனனை இரண்டே தோள்‌ கொண்டவனும்‌ இளைஞனுமாகிய பரசுராமன்‌ தனது கோடாலி கொண்டு வெட்டி வீழத்தவில்லையா?”

அரண்‌ தரு – பாதுகாப்பளிக்கின்ற; திரள்‌ தோள்‌ – திரண்ட தோள்கள்‌: சால உள எனின்‌ – மிகுதியாக இருந்து விட்டால்‌ போதுமா? ஆற்றல்‌ உண்டோ – திறமை உண்டாகி விடுமா? அவை வலியவை என்று கூறிவிட முடியுமா? கரண்ட நீர்‌ இலங்கை வேந்தை – நீர்க்காகங்கள்‌ வாழும்‌ கடல்‌ நீரால்‌ சூழப்‌ பெற்ற இலங்கை அரசனாகிய இராவணனை; சிறை வைத்த – முன்‌ ஒருகால்‌ சிறையில்‌ அடைத்து வைத்த; கழல்கால்‌ வீரன்‌ – வீரக்கழல்‌ அணிந்த கால்களை உடைய வீரனாகிய கார்த்தவீரியார்ச்சுனைது; திரண்டதோள்‌ வனத்தை எல்லாம்‌ – திரண்டதோள்களாகிய காட்டை (கார்த்தவீரியார்ச்சுனன்‌ ஆயிரம்‌ தோள்களை உடையவன்‌) சிறியது ஓர்‌ பருவம்‌ தன்னில்‌ – சிறு வயதிலே; இரண்டு தோள்‌ ஒருவன்‌ – இரண்டு தோள்களோடு கூடியவனாகிய பரசுராமன்‌; மழுவினால்‌ – தன்‌ கைக்‌-