பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கோடாலியால்‌ வெட்டி வீழ்த்தினான்‌; அன்றோ – அல்லவா என்றாள்‌.

என்று அவள்‌ உரைத்தலோடும்‌
        எரிந்தன நயனம்‌; திக்கில்‌
சென்றன திறள்‌ தோள்‌; வானம்‌
        தீண்டின மகுடம்‌; திண்‌ கை
ஒன்றொடு ஒன்று அடித்த; மேகத்து
        உரும்‌ என எயிற்றின்‌ ஒளி
மென்றன; வெகுளி பொங்க
        விட்டது மாய வேடம்‌.

இவ்வாறு சீதை சொன்ன உடனே இராவண சந்நியாசிக்குக்‌ கோபம்‌ வந்துவிட்டது. கண்கள்‌ தீப்பொறி கக்கின; கிரீடம்‌ அணிந்த தலைகள்‌ வானை முட்டின; இருபது கைகளும்‌ நாலாபக்கமும்‌ சென்று ஒன்றுடன்‌ மற்றொன்று அடித்துக்கொண்டன; மேகத்திலே தோன்றும்‌ இடிபோல்‌, பல்லை நறநற என்று கடித்தான்‌. இடியில்‌ தோன்றும்‌ மின்னல்போல்‌ பற்கள்‌ ஒளி வீசிய. மாய சந்நியாசி வேடம்‌ கலைந்தது.

என்று அவள்‌ உரைத்தலோடும்‌ – என்று பிராட்டி கூறிய அளவில்‌; நயனம்‌ எரிந்தன – அந்த இராவண சந்நியாசியின்‌ கண்கள்‌ எரி கக்கின; திரண் தோள்‌ – திரண்ட தோள்கள்‌; திக்கில்‌ சென்றன – திக்குகள்‌ எங்கும்‌ பரந்து பூரித்துச்‌ சென்றன; மகுடம்‌ – கிரீடங்கள்‌; வானம்‌ தீண்டின – ஆகாயத்தை முட்டின; தீண்‌கை – வலியகைகள்‌; ஒன்றொடு ஒன்று அடித்த – ஓன்றோடு ஓன்று அடித்துக்கொண்டன. (எது போல?) மேகத்தின்‌ உரும்‌ என – மேகத்தில்‌ தோன்றும்‌ இடிபோல; எயிற்றின்‌ ஒளி மென்றன – பல்லை நறநற என்று