பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

கடித்தபோது அப்‌ பல்‌ வரிசையில்‌ தோன்றிய ஒளி, மின்னல்‌ போல்‌ தோன்றின; வெகுளி பொங்க – சினம்‌ எழுந்து பொங்க; விட்டது மாயவேடம்‌ – மாய சந்நியாசி வேடம்‌ கலைந்தது.


ஆற்ற வெம்‌ துயரத்து அன்னாள்‌
        ஆண்டு உற்ற அலைக்கண்‌ நோக்கின்‌
ஏற்றம்‌ என்‌ நினைக்கல்‌ ஆகும்‌?
        எதிர்‌ எடுத்து இயம்பலாகும்‌.
மாற்றம்‌ ஒன்று இல்லை; செய்யும்‌
        வினை இல்லை; வரிக்கல்‌ ஆகாக்‌
கூற்றம்‌ வந்து உற்ற காலத்து
        உயிர்‌ எனக்‌ குலைவு கொண்டாள்‌.

இவ்வாறு இராவணன்‌ தன்‌ சுயரூபம்‌ வெளிப்பட்டு நிற்கக்‌ கண்டாள்‌ சீதை.

இராமனுக்கு ஆபத்து நேர்ந்து விட்டதாக எண்ணி துயருற்றிருக்கும்‌ அவளுக்கு மற்றும்‌ ஒரு பெருந்துயரம்‌ நேர்ந்துவிட்டது. இத்துயரத்துக்கு அதிகமான துன்பம்‌ வேறு எது உளது? எதைச்‌ சொல்லமுடியும்‌? அவன்‌ சொல்லக்‌ கூடியது எதுவும்‌ இல்லாது போயிற்று. என்ன செய்வது என்று தெரியவில்லை. தப்பிக்கின்ற வழியும்‌ இல்லை. செயலற்றவள்‌ ஆனாள்‌. இயமன்‌ வந்தபோது உயிர்‌ எப்படித்‌ துக்குமோ அப்படித்‌ துடித்தாள்‌.

ஆற்ற வெம்‌ துயரத்து அன்னாள்‌ – இராமபிரானுக்கு ஏற்பட்ட துன்பத்தை எண்ணிப்‌ பெரும்‌ துன்பமுற்றிருந்த சீதை; ஆண்டு உற்ற – அப்பொழுது அந்த இராவணனால்‌ நேர்ந்த; அலைக்கண்‌ நோக்கின்‌ – துன்பத்தைப்‌ பார்க்கும்‌