பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


அன்னம்‌ – அன்னம்‌ போன்றவளே! குலைவுறல்‌ – பயப்‌படாதே; முன்னம்‌ யாரையும்‌ கும்பிடா – இதற்குமுன்‌ எவரையும்‌ கும்பிட்டு வணங்காத; என்‌ தலை மிசை – என்‌ முடி மீதுள்ள; மகுடம்‌ என்ன – கிரீடம்‌ என்று சொல்லும்‌ படியாக; தனித்தனி – ஒவ்வொரு தலையிலுமாக; இனிது தாங்கி – இனிமையாக உன்னை உயர்த்தி வைத்துக்‌ கொண்டு; அலகு இல்‌ பூண்‌ அரம்பை மாதர்‌ – கணக்கற்ற ஆபரணங்களை அணிந்த அரம்பையர்கள்‌; அடிமுறை ஏவல்‌ செய்ய – உன்‌ திருவடி பணிந்து முறைப்படி நீ அவர்களுக்கு இடும்‌ குற்றேவல்‌ செய்ய; உலகம்‌ ஈரேழும்‌ – ஈரேழு பதினான்கு உலகங்களும்‌; ஆளும்‌ – ஆட்சி செலுத்தும்‌; செல்வத்துள்‌ – எனது பெரும்‌ செல்வ வாழ்வில்‌; உறைதி – மகிழ்ந்திருப்பாயாக; என்று – என்று சொன்னான்‌.

“விண்ணவர்‌ ஏவல்‌ செய்ய
        வென்ற என்‌ வீரம்‌ பாராய்‌;
மண்ணிடைப்‌ புழுவின்‌ வாழும்‌
        மானிடர்‌ வலியர்‌ என்றாய்‌;
பெண்‌ எனப்‌ பிழைத்தாய்‌ அல்லை
        உன்னை யான்‌ பிசைந்து தின்ன
எண்ணுவென்‌; எண்ணில்‌ பின்னை
        என்‌ உயிர்‌ இழப்பென்‌” என்றான்‌.

“தேவர்களை வெற்றி கண்டு அவர்கள்‌ எனக்கு ஏவல்‌ செய்ய வைத்த எனது வீர பராக்கிரமத்தை நீ எண்ணிப்‌ பார்க்காதவளாய்‌ இந்த பூமியிலே வாழும்‌ அற்பப்‌ புழுக்‌களாகிய மானிடர்‌ வலியர்‌ என்றாய்‌ இவ்வாறு என்‌ எதிரில்‌ கூறிய நீ ஒரு பெண்‌ ஆனமையின்‌ உன்னைச்‌ சும்மாவிட்டேன்‌. இன்றேல்‌ உன்னைப்‌ பிசைந்து தின்றிருப்பேன்‌. அப்படிச்‌ செய்து விட்டால்‌ நீ இறந்துவிடுவாய்‌. உன்‌ மீது கொண்ட