பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

சார்ந்த நெடுஞ்சாலை வழியே; சேண்‌ இடை– வெகு தூரத்தில்‌ உள்ள கேகய நாட்டிற்கு; கடிது– விரைவாக; போக்கிய பொருள்‌– அனுப்பியதன்‌ பொருள்‌; இன்று எனக்குப்‌ போந்ததால்‌– இன்று தான்‌ எனக்கு விளங்கிற்று.


“போதி என்‌ எதிர்‌ நின்று
        நின்‌ புன்‌ பொறி நாவை
சேதியாது இது பொறுத்தனன்‌
        புறம்‌ சிலர்‌ அறியின்‌
நீதி அல்லவும்‌ நெறி முறை
        அல்லவும்‌ நினைந்தாய்‌
ஆதி; ஆதலின்‌ அறிவிலி
        அடங்குதி” என்றாள்‌.

‘போ! என்‌ எதிரில்‌ நில்லாதே! தகாக சொல்‌ கூறிய உன்‌ நாவைத்‌ துண்டிக்காமல்‌ பொறுத்தேன்‌.

வேறு எவரேனும்‌ அறிந்தால்‌ நீதியற்ற முறையற்ற செயல்களை நினைப்பவள்‌ என்று ௨ன்மீது குற்றம்‌ சுமத்துவார்கள்‌,

தண்டனைக்கும்‌ உள்ளாவாய்‌.

எனவே உன்‌ நாவை அடக்கு!’ என்றாள்‌ கைகேயி.

என்‌ எதிரில்‌ நின்று போதி– என்‌ எதிரிலிருந்து அப்பால்‌ போ; நின்‌ புன்‌ பொறி நாவை– கீழ்த்தரமான சொற்களைச்‌ சொன்ன உன்னுடைய நாக்கை; சேதியாது– துண்டிக்காமல்‌; இது பொறுத்தனன்‌– இதைப்‌ பொறுத்துக்‌ கொண்டேன்‌; புறம்‌ சிலர்‌ அறியின்‌– வேறு எவராவது இதை அறிந்தால்‌; நீதி அல்லவும்‌, நெறி முறை அல்லவும்‌–