பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



119



கோதாவரியே – கோதாவரி நதியே; குளிர்வாய் – குளிர் தன்மை உடையாய்; குழைவாய் – நீ இளகிய இயல்புடையாய்; மாதா அணையாய் – உயிர்களுக்குத் தாய் போன்றவளே (எனக்கும் தாய் போன்றவளே) மனனே தெளிவாய் – குற்றமற்ற தெளிந்த மனமுடையாய்; நீ தான் – நீயாவது; ஓதாது உணர்வார் உழை – ஓதாமலே உணர்ந்த எனது கணவராகிய இராமனிடம்; ஓடினை போய் – ஓடிச் சென்று; வினையேன் நிலை – துன்பத்திற்குரிய தீவினையுடைய எனது நிலையை; சொல்லலையோ – சொல்ல மாட்டாயோ!

“முந்தும் சுனைகாள்!
        முழை வாழ் அரிகாள்!
இந்தந் நிலத்தோடும்
        எடுத்தகை நால்
ஐந்தும், தலை பத்தும்
        அலைந்து உலையச்
சிந்தும்படி கண்டு
        சிரித்திடுவீர்.”

“மலையிலே உள்ள நீர்ச்சுனைகளே! மலைக்குகையில் வாழும் சிங்கங்களே! நான் இருந்த பூமியோடு என்னைப் பெயர்த்துக்கொண்டு போகிற இவனது கைகள் இருபதும், தலைகள் பத்தும் இராம பாணத்தால் அறுந்து கீழே விழுதல் கண்டு நீங்கள் சிரிக்கமாட்டீர்களா!”

முந்தும் – என் முன்னே தோன்றுகின்ற; சுனைகாள் – மலை ஊற்றுக்களே; முழைவாழ் – மலைச்குகைகளிலே வாழும்! அரிகாள் – சிங்கங்களே; இந்தந் நிலத்தோடும் – நான்