பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



121



இவ்வாறு சீதை இடித்துக் கூறவும் அந்த இராவணன் சொல்கிறான்.

மொழி தரும் அளவில் “நங்கை!
        கேள் இது; முரண் இல் யாக்கை
இழி தரு மனிதரோடே
        யான் செரு ஏற்பல் என்றால்
விழி தரும் நெற்றியான் தன்
        வெள்ளி வெற்பு எடுத்தோட்குப்
பழி தரும்; அதனின் சாலப்
        பயன் தரும் வஞ்சம்” என்றான்.

“பெண்ணில் சிறந்தவளே! நான் சொல்வது கேள். நீ சொன்ன அந்த மனிதர்களோடே நான் நேர் நின்று போர் செய்வேனேயாகில் அது எனக்குப் பழி. நெற்றியிலே கண் படைத்த அந்தச் சிவபெருமானுடைய கைலாசகிரியை எடுத்த என் தோள்களுக்கு இழிவு. அதை விட இந்த வஞ்சகச் செயல் நல்லதொரு பயன் தருவது ஆகும்” என்றான்.

மொழி தரும் அளவில் – இவ்வாறு சீதை சொன்ன அளவிலே; (அவளை நோக்கி) நங்கை – பெண்ணிற் சிறந்தவளே! இது கேள் – நான் சொல்லும் இந்தச் சொற்களைக் கேட்பாயாக; முரண் இல் யாக்கை – வலியற்ற உடல் கொண்ட; இழிதரு மனிதரோடே – இழிவான மனிதர்களுடனே; யான் செரு ஏற்பல் என்றால் – நான் போரிடுவேன் என்றால்; விழி தரும் நெற்றியான் தன் – நெற்றிக் கண்ணன், சிவபெருமானுடைய; வெள்ளிவேற்பு – வெள்ளி மலையாகிய கைலாசகிரியை; எடுத்தோட்குப் – எடுத்தஎனது தோள்களுக்குப்; பழிதரும் – பழிப்புண்டாகும்;