பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



123

எனும் நெடிய மலை; வானின் வருவதே போலும் – ஆகாயத்திலே வருவதே போன்ற; மெய்யான் – பருத்த உடல் உடையவனும் (ஆன சடாயு வந்தான்).

பாழி வன் கிரிகள் எல்லாம்
        பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று
பூழியின் உதிர, விண்ணில்
        புடைப்புறக் கிளர்ந்து பொங்கி
அழியும் உலகும் ஒன்றாய்
        அழிதர முழுதும் வீசும்
ஊழி வெம் காற்று இது என்ன
        இரு சிறை ஊதை மோத

(அந்த சடாயு)

தன் இரு சிறகுகளையும் வீசிக்கொண்டு வந்ததால் ஊழிக் காற்று என்று சொல்லும்படியாகக் காற்று வீசியது

பருத்த வலிய மலைகள் எல்லாம் பூமியிலிருந்து வேரோடு பெயர்ந்து ஆகாயத்திலே எழும்பி ஒன்றுடன் மற்றொன்று மோதிப் பொடிப்பொடியாகி பூமியிலே விழுந்தன. பெரும் ஓசையுடன் கடல் பொங்கி வானை மூட்டும்படியாக அலை எழும்பியது.

பாழி வன் கிரிகள் எல்லாம் – பருத்த வலிய மலைகள் யாவும்; பறித்து எழுந்து – பறிக்கப்பட்டு மேலே எழுந்து; ஒன்றோடு ஒன்று – ஒன்றுக்கொன்று; பூழியின் உதிர – புழுதி போலாகி உதிர்ந்து விழ; விண்ணில் புடைப்புற – வானில் முட்டும்படியாக; கிளர்ந்து பொங்கி – பெரும் ஓசையிட்டு மேற்கிளம்பி; ஆழியும் – கடலும்; உலகும் – இவ்வுலகமும்;