பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



124

ஒன்றாய் அழிதர – ஒரேயடியாக அழிந்து போக; முழுதும் வீசும் – உலகமெங்கும் வீசியடிக்கும்; ஊழி வெம்காற்று – ஊழிக்காற்று; இது என – இது என்று சொல்லும்படியாக; இரு சிறை – தன் இரண்டு சிறகுகளும்; ஊதைமோத – பெருங்காற்று வீச.

சாகை வன் தலையொடு
        மரமும் தாழ மேல்
மேகமும் விண்ணின்
        மீச் செல்ல மீ மிசை
“மாக வெம் கலுழன் ஆம்;
        வருகின்றான்” என
நாகமும் படம் ஒளித்து
        ஒதுங்கி நையவே.

வனத்திலிருந்த மரங்கள் கிளையுடன் கீழே விழுந்தன. வானிலே உள்ள மேகங்கள் பூமியிலே உள்ள மலைகள் இரண்டும் இடம்மாறி விண்ணிலே சென்றன. வைகுந்தத்தில் இருக்கின்ற கருடன் வருகிறான் என்று பயந்து சர்ப்பங்கள் படம் விரித்து ஆடுதல் ஒழித்து ஓடி ஒடுங்கின.

மரமும் – அவ் வனத்திலிருக்கின்ற மரங்களும்; சாகைவன் தலையொடு – கிளைகளாகிய வலிய தலையொடு; தாழ – தாழ்ந்து விழ; மேல் மேசமும் கிரிகளும் – மேலே உள்ள மேகங்களும் மலைகளும்; விண்ணின் மீச் செல்ல – இடம் பெயர்ந்து ஆகாயத்தின் மேலே செல்லவும், மாகவெம்கலுழனே வருகின்றான் – வைகுந்தத்தில் உள்ள கருட பகவானே வருகின்றான; என – என்று சொல்லுமபடியாக; நாகமும் – சர்ப்பங்களும்; படம் ஒளித்து – தம் படங்களைச்