பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

பெயர்த்துக்கொண்டு போயினர். தன் செல்வத்தைக் காணாமல் ஏக்கமுற்றவன் போல் ஏங்கி நின்றான் இராமன்.

கனங்குழை – கனமான காதணி அணிந்த; அணங்கினை – சீதா பிராட்டியை; காணான் – காணாமல்; கைத்த சிந்தையன் – மனம் வெறுப்புற்ற இராமன்; உய்த்து வாழ் தர உதவ – வேண்டும்போது தனது ஜீவனோபாயத்துக்கு உதவுவதற்காக; வேறு பொருள் இலான் – வேறு பொருள் ஏதும் வைத்துக்கொள்ளாமல் தன்னிடமுள்ள பொருள் முழுவதையும்; மண்ணோடு வைத்த மாநிதி – மண்ணிலே புதைத்து வைத்த பெரும் செல்வமானது; பொய்த்துளோர் – வஞ்சகரான கள்வர்; வாங்கி கொள மறைந்தன – மண்ணோடு பெயர்த்துக் கொண்டு போய் மறைத்துவிட; திகைத்து நின்றானையும் போன்றான் – ஏக்கமுற்ற ஒருவன் போல் ஆனான்.

“தேரின் ஆழியும் தெரிந்தனம்
        தீண்டுதல் அஞ்சிப்
பாரினோடு கொண்டு அகன்றதும்
        பார்த்தனம்; பயன் இன்று
ஒரும் தன்மை ஈது என் என்பது?
        உரன் இலாதவர் போல்;
தூரம் போதல் முன்தொடர்ந்தும்” என்று
        இளையவன் தொழலும்

“தேர்ச் சக்கரத்தின் சுவடு கண்டோம்; தேவியைத் தீண்டுதற்கு அஞ்சி நிலத்தொடு பெயர்த்து எடுத்துச் சென்றதும் அறிந்தோம். இனி, வலிமையில்லாதவர் போல் ஆலோசிப்பதில் பயன் என்ன? தேவியை எடுத்துச் சென்றவன்