பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137அங்கே இரத்த வெள்ளத்தில் சடாயு குற்றுயிராகக் கிடக்கக் கண்டனர் இருவரும்.

உடனே இராமன் அந்த சடாயுவின் மீது விழுந்து புரண்டு அழுதான்.

துள்ளி ஓங்கு செந்தாமரை
        நயனங்கள் சொரியத்
தள்ளி ஓங்கிய அமலன் தன்
        தனி உயிர்த் தந்தை,
வள்ளியோன் திருமேனியில்
        தழல் நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சன
        மலை என வீழ்ந்தான்.

தனது செந்தாமரைக் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் பெருகச் சிவபெருமானின் வெள்ளிமலை மீது கரியமலை கிடந்ததுபோல விழுந்து அழுதான் இராமன்.

ஓங்கு செந்தாமரை நயனங்கள் — சிறந்து விளங்கும் செந்தாமரைக் கண்கள்; துள்ளி சொரியத்தள்ளி — நீர்த்துளிகளைச் சொரிந்து வெளியிட்டு ஓங்கிய; துன்பம் மேலிட்ட அமலன் — பரிசுத்தனாகிய இராமன்; தன் தனி உயிர் தந்தை — தனது ஒப்பற்ற உயிர் போன்ற தந்தையும்; வள்ளியோன் —வள்ளலுமான சடாயுவின்; திருமேனியில் திருமேனி மீது; தழல் நிற மன்னன் — செந்நிற மேனிச் சிவபெருமானுடைய; வெள்ளி ஓங்கலில் —வெள்ளிமலை எனும் வெண்ணிறக் கயிலை மலை மீது; அஞ்சன மலை என — ஒரு கருமை நிற மலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்தான்.