பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது138


“என தாரம் பற்றுண்ண
        ஏன்றாயைச் சான்றோயைக்
கொன்றானும் நின்றான்;
        கொலையுண்டு நீ கிடந்தாய்;
வன் தாள் சிலை ஏந்தி
        வாளிக் கடல் சுமந்து
நின்றேனும் நின்றேன்
        நெடுமரம் போல் நின்றேனே.”

“என் மனைவியைப் பிறன் ஒருவன் கவர்ந்து சென்றான். அது கண்டு அவளைக் காத்து மீட்கும் பொருட்டு நீ போரிட்டாய் சான்றோய்! நீ இறந்துவிட்டாய். உன்னைக் கொன்றவனோ இன்னும் உயிரோடு இருக்கின்றான். நீ கொலையுண்டு கிடக்கின்றாய். நானோ வில் சுமந்து ஒரு கூடை அம்புகளைச் சுமந்து வீணில் நிற்கின்றேன், நெடு மரம்போல் நிற்கின்றேனே.”

என் தாரம் பற்று உண்ண – என் மனைவியை இன்னொருவன் கவர்ந்து செல்ல; என்றாயை – அது கண்டு அவளை மீட்கும் பொறுப்பினை ஏற்றுப் போரிட்ட உன்னை; சான்றோயை – மேலான குணச்சிறப்புடைய உன்னை; கொன்றானும் – கொன்றவனாகிய அக் கொடியோனும்; நின்றான் – இறவாது இன்னும் உயிர் கொண்டு வாழ்கின்றான்.

நீ கொலை உண்டு கிடந்தாய் – நீயோ கொலை செய்யப்பட்டுக் குற்றுயிராய்க் கிடக்கின்றாய்; வல்தாள் சிலை ஏந்தி – வரிய அடிப்பாகம் கொண்ட வில்லினை ஏந்தி; வாளிக் கடல் சுமந்து – கடல்போல் ஏராளமான அம்புகளை வீணில் சுமந்துகொண்டு; நின்றேனும் – நிற்கின்ற யானும்;