பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது139

நின்றேன் - சும்மா நிற்கின்றேன்; நெடுமரம் மரம்போல் நின்றேனே - நீண்டுயர்ந்த மரம்போலப் பயனற்றவனாய் நின்றேனே,

இவ்வாறு இராமன் அழுது புலம்பக் கண் விழித்தான் சடாயு. சீதா பிராட்டியைக்கொண்டு சென்றவன் இராவணன் தான் என்பதை அவர்களுக்கு அறிவித்து உயிர் நீங்கினான்.

இராமனும் லட்சுமணனும் அந்தப் புள்ளின வேந்துக்கு ஈமக்கிரியை செய்து மேலும் செல்லத் தொடங்கினர்.

அந்தி நேரம் வந்தது. இராமன் லட்சுமணன் ஆகிய இருவரும் ஒரு மலைச்சாரலில் தங்கினர். இரவு முழுவதும் துயில் கொள்ளாது துன்புற்றான் இராமன். பொழுது விடிந்தது. இருவரும் மீண்டும் நடந்தனர். பதினெட்டு யோசனை தூரம் நடந்தனர் அன்றைப்பொழுது போயிற்று. இரவு வந்தது. “பருகு நீர் கொண்டு வா தம்பீ” என்றான் இராமன்.

தம்பியாகிய லட்சுமணன் நீர் தேடிச் சென்றான். அயோமுகி எனும் அரக்கி ஒருத்தி லட்சுமணனைக் கண்டாள். அவன் மீது காமமுற்றாள். சூர்ப்பனகை, தாடகைபோல இவளும் ஓர் அரக்கி என்பது அறிந்தான் லட்சுமணன். அந்நிலையில் அவனை வலிந்து தூக்கிக்கொண்டு ஓடினாள் அயோமுகி, அப்போது அவளுடைய மூக்கை அறுத்து அவளுடைய பிடியிலிருந்து தப்பினான் லட்சுமணன் தண்ணீர் எடுத்துக்கொண்டு விரைந்து ஓடிவந்தான்.

நீண்ட நேரமாயிற்று நீர் கொண்டு வரச் சென்ற இளையவனைக் காணாது தவித்தான் இராமன். தேடிச் கொண்டுசென்றான். அப்போது எதிரே வந்து கொண்டிருந்த லட்சுமணன் இராமனிடம் தண்ணீரைக் கொடுத்து