பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரண்ய காண்டப் படலங்கள் நிகழ்ச்சிகள் சுருக்கம்

1. விராதன் வதைப்படலம்

இப் படலம் இராம லட்சுமணர் விராதனைக் கொன்ற கதையைக் கூறுகிறது. தண்டகாரணியம் செல்லும் வழியில் அத்திரி முனிவரின் ஆசிரமம் அடைந்தனர். அங்கு அனசூயை சீதைக்கு ஆபரணங்களும், பட்டாடைகளும் அளித்தாள். தண்டகாரணியத்தில் சீதையை விராதன் தூக்கிச் சென்றான். தசரத மக்கள் இருவரும் அவனது தோள்களைத் துண்டித்தனர்; விராதனின் வரலாறும் இதிலுள்ளன.

2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்

பின்னர்ச் சரபங்கனது ஆசிரமத்திற்கு அருகே சென்றனர். பிரமனது கட்டளையால் அம்முனிவனைச் சத்திய லோகத்திற்கு அழைத்துப் போக வந்திருந்த தேவேந்திரன் இராமனைக் கண்டு துதித்துவிட்டு ஏகினான். இராமபிரானது சேவைக்குக் காத்திருந்த அந்த முனிவர், அப்பிரான் எழுந்தருளியவுடனே அவரை வணங்கி, துதித்து பின் இராகவன் எதிரிலேயே அக்கினிபிரவேசஞ் செய்து, பிறப்பு நீங்கினார்.

3. அகத்தியப் படலம்

சீதையுடனும் லட்சுமணனுடனும் அகத்தியர் ஆசிரமம் சென்றடையும் வழியில் கழிந்த காலத்தையும் சுதீட்சண முனிவர் பற்றியும், பஞ்சாப்ஸரஸ் தடாக வரலாற்றையும் கூறுகிறது இப் படலம்.

4. சடாயு காண்படலம்

இப்படலம், சடாயுவைப் பற்றிக் கூறுவதாகும். தசரத சக்கரவர்த்திக்கு உயிர்த் தோழன் சடாயு, மிக்க ஆயுளுடையவன்; கழுகுக்கரசன் தசரதனுக்கு பற்பல உதவிகள் செய்தவன். சடாயுவை இராம லட்சுமணர் காண, அவன் இவர்களை தன் சொந்த மைந்தர்களாகவே நினைத்துப் பாதுகாத்தான். பின் பஞ்சவடியை அவ்விரு வரும் அடைந்த வரலாற்றைக் கூறுகிறது.

5. சூர்ப்பனகைப் படலம்

இராவணனின் தங்கையான சூர்ப்பணகை தண்டகாரணியத்தில் தூஷணன் கரன் ஆகியவர்களுடன் அங்குள்ள வனவாசிகளை வருத்தி வந்தாள். இராம லட்சுமணனைக் கண்டவுடன் இராமனின்