பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

மேனியழகில் மயங்கினாள். அழகியவடிவங்கொண்டு இராமனைக் கவர முயன்ற இவள், சீதையைக கண்டாள். சீதையே இராமன் தன்னை உதாசீனம் செய்யக் காரணம் என்று, சீதையைக் கவர்ந்துச் செல்ல யத்தனித்தாள். காவல் புரிந்த லட்சுமணனோ, சூர்ப்பணகையின் மூக்கைத் தன் வாளால் அறுத்தெறிந்தான் ஏமாற்றமடைந்த அரக்கி அவமானம் தாங்காது, பழிவாங்க திட்டமிட்டாள்.

6. கரன் வதைப்படலம்

இராம லட்சுமணரிடம் கருவிக்கொண்டு சென்ற சூர்ப்பனகை கரன் காலில் விழுந்து புலம்பி முறையிட்டாள். போருக்கு வந்த கரனுடைய இராக்கத வீரர்கள் இராமனுடைய அம்புக்கு இரையாயினர். கரன் மிகப்பெரிய சேனையோடு வந்தான். தூஷணனும் கரனுடன் சென்றான். வருணன் தனக்குத்தந்த விஷ்ணு தனுசை எடுத்து நாணேற்றி, கரனை வெற்றிக்கொண்டான். இரகு வீரன். கண்டாள் சூர்ப்பனகை; ஓடினாள்; இலங்கைக்கு இச்செய்தியை இராவணனுக்குச் சொல்ல.

7. மாரீசன் வதைப் படலம்

மிக்க மாயைச்செய்ய வல்லவன் மாரீசன். சூர்ப்பணகை இராவணனிடம் ஏற்படுத்திய பெருஞ்சினமும் சீதையிடம் மூண்ட பெருங்காதலும் இராவணனை சீதையை வஞ்சனையால் கவர்ந்து வருவதற்குத் தூண்டியது. அதற்கு உதவியாக மாரீசனை நாடினான். முதலில் இதற்கு இணங்க மறுத்தாலும், பின்னர் பொன்மான் உருக்கொண்டு சீதை எதிரில் சென்றான் மாரீசன், சீதை அந்த மானைப் பிடித்துத் தரும்படி இராமனை வேண்டினாள். லட்சுமணன் “இது, பொய் மான்” என்று உண்மை கூறித் தடுக்கவும், கேளாமல், சீதை வற்புறுத்தவே இராமன் அதை பிடிக்கச் சென்றான். நெடுந்துாரம் சென்றுவிட்ட அந்த மானை இராமனின் அம்பு வீழ்த்தியது. தன் மெய் வடிவுக்கொண்ட மாரீசன் “ஹா சீதா! லட்சுமணா”! என்று இராமனின் குரலில் கூவினான். இக்குரல் கேட்டு, சானகி மிகவும் துயருற்றாள்.

8. சடாயு உயிர் நீடித்த படலம்

சீதை பதறினாள். லட்சுமணனை இராமனைக் காக்கச் செல்லுமாறு வற்புறுத்தினாள். தன்னை விட்டு இராமனிடம் ஏகுமாறு செய்தாள். சீதை தனித்திருந்த சமயம் இராவணன் சந்நியாசி வேடங்கொண்டு வந்தான். சீதை அவனுடைய தவக் கோலத்தை நம்பினாள். இராவணன் தன்