பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


கைகேயியும் இதுதான் தருணம் என்று எண்ணினாள். தசரதன் முன்பு அளித்திருந்த வரங்கள் இரண்டையும் இப்போது அளிக்கும்படி கேட்டாள்.

பரதனுக்கே முடிசூட வேண்டும் என்பது ஒரு வரம். இராமன் பதினான்கு ஆண்டுகள் காடு செல்ல வேண்டும் என்பது மற்றொரு வரம்.

இந்த மொழிகளைக் கேட்ட உடனே மன்னன் தசரதன் உற்ற நிலையை இங்கே நமக்குக் காட்டுகிறார் கவி.

உலர்ந்தது நா; உயிர்
        ஓடல் உற்றது; உள்ளம்
புலர்ந்தது; கண்கள் பொடித்த
        பொங்கு சோரி
சலம் தலை மிக்கது; தக்கது
        என் கொல் என்று என்று
அலைந்து அலையுற்ற அரும்
        புலன்கள் ஐந்தும்.

நாக்கு வறண்டது; உயிர் பிரியும் போல் ஊசலாடிற்று; மனம் வாடியது; கண்கள் இரத்தம் சொரிந்தன; கோபம் தலைக்கு ஏறியது; “என்ன செய்யலாம்?” என்று எண்ணி எண்ணிப் புலன்கள் ஐந்தும் குழம்பின; கலங்கின.

நா உலர்ந்தது–நாக்கு வறண்டது. உயிர் ஓடல் உற்றது–உயிர் போகத் தொடங்கியது; உள்ளம் புலர்ந்தது; மனம் தளர்ந்தது; கண்கள் பொங்கு சோரி பொடித்த–கண்கள் பொங்கி மிகுந்த இரத்தம் சிந்தின; சலம் தலை மிக்கது–துன்பம் தலைக்கேறியது; அரும்-