பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

இராமன் மீண்டும் இந்நகருக்கு வந்தால் அவனுடன் நீயும் வா. அவன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அந்தச் செய்தி கொண்டு நீ மட்டும் வராதே. அவனுக்கு முன் நீ உயிர் விடு.”

அவளுடைய தனங்கள் பால் சொரிந்தன. எதனால்? மகன் மீதுள்ள தாயன்பினால்.

பின்னும்– மீண்டும்; பகர்வாள்– சொல்வாள்; மகனே– இவன் பின் செல்– இராமனைத் தொடர்ந்து செல்வாயாக; தம்பி எனும்படி அன்று– தம்பி என்கிற முறையில் அன்று; அடியாரினில் ஏவல் செய்தி– அடிமையைப் போல ஏவிய செயல்களைச் செய்வாய்; இவன்– இந்த இராமன்; மன்னும் நகர்க்கே வந்திடில் வா– வளம் நிலைத்த இந்த அயோத்திக்குத் திரும்பி வந்தால் வா; இன்றேல்– அவ்விதம் இல்லையேல்; முன்னம் முடி– அவனுக்கு முன்னால் நீ உன் உயிரை விடு; என்றாள்– என்று சொன்னாள்; பால் முலை சோர நின்றாள்– மார்பிலிருந்து பால் சொரிய நின்றவளாகிய சுமித்திரை.

கிள்ளையொடு பூவை
        அழுத; கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத;
        உரு அறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை
        என் சொல்ல
வள்ளல் வனம் புகுவான் என்று
        உரைத்த மாற்றத்தால்

இராமன் காடு செல்வது கேட்டுக் கிளிகள் அழுதன; நாகண வாய்ப் பறவைகள் அழுதன; உயர் மாளிகைகளில்