பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


அதிகாலையிலே எழுந்திருந்து, கங்கையைக்‌ கடப்பதற்கு ஓடம்‌ கொண்டு வரச்‌ சொல்லி, இராமன்‌, இலட்சுமணன்‌, சீதை ஆகிய மூவரும்‌ அதில்‌ ஏறிக்‌கொண்டார்கள்‌. ஓடத்தை மறு கரைக்குக்‌ கொண்டு சேர்த்தான்‌ குகன்‌. கரை சேர்ந்தவுடனே இராமன்‌ குகனைப்‌ பார்த்துக்‌ கேட்டான்‌.

தேன்‌ உள; தினை உண்டு
        ஆல்‌ தேவரும்‌ நுகர்வதற்கு ஆம்‌
ஊன்‌ உள; துணை நாயேம்‌
        உயிர்‌ உள விளையாடக்‌
கான்‌ உள புனலாடக்‌
        கங்கையும்‌ உளது அன்று
நான்‌ உளதனையும்‌ நீ இனிது
        இரு; நட எம்பால்‌

இங்கே தேன்‌ இருக்கிறது; தினை இருக்கிறது. தேவர்‌களும்‌ விரும்பி உண்ணத்‌ தக்க ஊன்‌ உள்ளது. நாய்‌களாகிய நாங்கள்‌ துணைக்கு இருக்கிறோம்‌. விளையாடுவதற்குப்‌ பொழில்கள்‌ இருக்கின்றன. நீராடுவதற்குக்‌ கங்கையும்‌ இருக்கிறது. என்‌ உயிர்‌ உள்ள அளவும்‌ நீ இங்கேயே இரு. “வா! என்‌ பின்‌ நட” என்று வேண்டினான்‌ குகன்‌.

தேன்‌ உள– எம்மிடம்‌ தேன்‌ இருக்கிறது; தினை உண்டு– தினையும்‌ இருக்கிறது; தேவரும்‌ நுகர்தற்கு ஆம்‌ ஊன்‌ உள– தேவர்களும்‌ உண்ணத்தக்க சுவையுள்ள. மாமிசம்‌ இருக்கிறது; துணை– உமக்குப்‌ பக்க பலமாக; நாயேம்‌ உயிர்‌ உள– நாயாகிய இந்த ஜீவன்கள்‌ உள;

3