பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

அன்பு கொண்ட குகனைப்‌ பார்த்து; சித்திர கூடத்தில்‌ செல்‌ நெறி பகர்‌ என– சித்திர கூட மலை செல்லும்‌ வழி சொல்‌ என; பக்தியின்‌ உயிர்‌ ஈயும்‌ பரிவினன்‌– பத்தியுடன்‌ உயிரும்‌ தரவல்ல அன்புடைய அக்குகன்‌; அடி தாழா– இராமனது திருவடிகளில்‌ வணங்கி; உத்தம– மேலோய்‌! அடி நாயேன்‌– அடியேனும்‌ நாய்‌ போல்‌ கடமைப்பட்டவனுமாகிய நான்‌; ஓதுவது உனது– தேவரீரிடத்துக்‌ கூற வேண்டுவது உள்ளது! என்றான்‌.

தோல்‌ உள; துகில்‌ போலும்‌
        சுவை உள தொடர்‌ மஞ்சம்‌
போல்‌ உள பரண்‌; வைகும்‌
        புரை உள; கடிது ஓடும்‌
கால்‌ உள; சிலை பூணும்‌
        கை உள; கலி வானின்‌
மேல்‌ உள பொருளேனும்‌
        விரைவொடு கொணர்வேமால்‌

உடுத்திக்‌ கொள்வதற்குரிய நூலாடைபோல்‌ மெல்லிய தோல்‌ உளது. இன்பந்தரும்‌ மஞ்சம்‌ போன்ற பரண்‌ உளது. இருப்பதற்குக்‌ குடில்கள்‌ உள்ளன. வேகமாக ஓடக்கூடிய வலிவுள்ள கால்கள்‌ உள்ளன. விண்ணிலே உள்ள பொருளாயினும்‌ விரைவிலேயே கொண்டு வந்து தருவோம்‌.

எனவே தன்‌ இடத்திலேயே இராமன்‌ தங்கி இருக்கு வேண்டினான்‌ குகன்‌.

துகில்‌ போலும்‌– (உடுத்திக்‌ கொள்வதற்கு) மெல்லிய பட்டு ஆடை போன்ற; தோல்‌ உள– தோல்கள்‌ உள்ளன;