பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

உளேன்‌– வில்‌ வல்ல கூட்டத்தினர்‌ உடையேன்‌; ஒன்றும்‌ வெருவலன்‌– எதற்கும்‌ அஞ்ச மாட்டேன்‌; மல்லினும்‌ உயர்‌ தோளாய்‌– மற்போர்‌ புரிவதினும்‌ மேம்பட்ட தோளினை உடையவளே; மலர்‌ அடி பிரியேனால்‌– மலர்‌ அடி ஒரு போகும்‌ பிரியேன்‌.

இவ்வாறு உளம்‌ கரைந்து குகன்‌ கூறிய மொழி கேட்டான்‌ இராமன்‌. குகன்‌ பால்‌ அன்பு கொண்டான்‌.

“என்‌ மனைவியான இந்தச்‌ சீதை உன்‌ தோழி; என்‌ தம்பியான இந்த இலக்குமணன்‌ உன்‌ தம்பி; நீ என்‌ உயிர்‌ தோழன்‌; இது வரை நாங்கள்‌ நால்வரே உடன்‌ பிறந்தவராயிருந்தோம்‌. இப்பொழுது உன்னுடன்‌ ஐவரானோம்‌; உன்‌ சுற்றம்‌ என்‌ சுற்றம்‌. அவர்கள்‌ உன்னைப்‌ பிரிந்து வருந்தலாகாது; அவர்களைப்‌ பாதுகாக்க யாருளர்‌? நான்‌ அயோத்தி நீங்கி வந்து விட்டேன்‌. அங்கு உள்ளவரைப்‌ பாதுகாக்க பரதன்‌ இருக்கிறான்‌ நீ இங்கே இரு; வடக்கு நோக்கி வரும்‌ போது உன்னிடம்‌ வருவேன்‌”, என்று கூறி குகனை நிற்கச்‌ செய்தான்‌ இராமன்‌.


தீயன சுவை யாவும்‌
        திசை செல நூறித்‌
தூயன உறை கானம்‌
        துருவினன்‌ வர வல்லேன்‌
மேயின பொருள்‌ நாடித்‌
        தருகுவென்‌ வினை மற்றும்‌
எயின செய வல்லேன்‌
        இருளினும்‌ நெறி செல்வேன்‌.

“தீய விலங்குகளை எல்லாம்‌ திசை தொறும்‌ விரட்டி நல்ல விலங்குகள்‌ உள்ள காடு எது என்று அறிந்து வந்து