பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

சொல்வேன்‌. நீங்கள்‌ விரும்பும்‌ பொருள்‌ தேடிக்‌ கொண்டு வந்து தருவேன்‌. இட்ட கட்டளைகளை எல்லாம்‌ செய்வேன்‌. இருளாயிருந்தாலும்‌ அஞ்சாது செல்வேன்‌.

தீயன– தீயனவாகிய; சுவையாவும்‌– சுவையுள்ள; புலி முதலியவற்றை எல்லாம்‌; திசை செல நூறி– நீங்கள்‌ வசிக்கும்‌ இடத்தைச்‌ சுற்றி இல்லாது பிற திசைகளுக்கு ஓட அழித்து; தூயன– பரிசுத்தமான மான்‌ போன்ற, பிராணிகள்‌; உறை– வாழ்கின்ற; கானம்‌– காட்டினிடத்தை; துருவினன்‌– ஆராய்ந்து கண்டுபிடித்து; வர வல்லேன்‌– தர வல்லேன்‌; மேயின பொருள்‌– நீங்கள்‌ விரும்பிய பொருளை; நாடித்தர வல்லேன்‌– தேடிக்‌ கண்டு பிடித்துக்‌ கொண்டு வருவேன்‌; ஏயின்‌ வினை மற்றும்‌– நீங்கள்‌ கட்டளையிட்ட எந்த செயலையும்‌; செயவல்லேன்‌– செய்து முடிக்கும்‌ வல்லமை உடையேன்‌; இருளினும்‌ நெறி செல்வேன்‌– இரவிலும்‌ வழிச்‌ செல்ல வல்லேன்‌.

இவ்வாறு குகன்‌ சொல்லவே, அவனுக்கு சமாதானம்‌ சொல்லி அங்கேயே இருக்கச்‌ சொல்லிவிட்டு, சீதை இலட்சுமணன்‌ ஆகியோருடன்‌ சித்திர கூட பர்வதம்‌ சென்று இருந்தான்‌ இராமன்‌.

அயோத்தியில்‌ என்ன நடந்தது? இராமன்‌ காடு சென்றான்‌ என்று கேட்டு உயிர்‌ விட்டான்‌ தசரத மன்னன்‌.

அவனுடைய உடலை எடுத்து பத்திரம்‌ செய்து விட்டு பரதனுக்குச்‌ சொல்லியனுப்பினார்‌ மந்திரி. தூதுவர்‌களும்‌ விரைந்து சத்துருக்னன்‌ ஆகிய இருவரையும்‌ அழைத்து வந்தனர்‌.